பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3847 பொல்லாதவனையும், எல்லார்க்கும் இரங்கி நல்லது செய்து வரு கிற நல்லவனையும் எதிர் எதிரா நேரே தெரிய நேர்ந்தோம். கள்ளன் என எள்ளியும், வள்ளல் என வாழ்த்தியும் உள்ள நிலைமைகளை உலகம் அறிய இங்கே நன்கு உணர்த்தி யுள்ளார். படைச் செருக்கு உடையவன் ஆகலால் விரைந்து விருேடு இலங்கை வேங்கன் போருக்கு மூண்டு வெளியே வருவான் என்று இராமன் எதிர்பார்த்து நின்றமை வரவு நோக்கி என்றத ல்ை தெரிய வந்தது.

எதிரியைப் போரில் நேரே காணலாம் என்று நெடுநேரம் எதிர்நோக்கிக் காத்திருந்தான்; அவன் வர வில்லை; ஆகவே காண்கிலாதான் என இராமன் அங்கே கின்ற நிலையைக் கவி - இங்ங்னம் காட்டியருளினர். - அரிய புண்ணிய சீலர்கள் பெரிதும் காணக் கருதி உருகி நிற்க வுரிய அங்கத் திவ்விய உருவன் பாவத் தொடர்புடையா னேக் கான விரும்பி நெடுநேரம் காத்து நின்றது ஈண்டு ஊன்றி உணர வுரியது. அரிய வுண்மைகள் எளிதே அறிய வந்தன. அக் தீயவனுடைய தீமையை நீக்கி நன்மையை ஆக்க இக் தாயவன் துணிந்து வந்திருக்கிருன்; அந்த வரவுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் நேர்ந்த நேரே கடந்து வருகின்றன. மாயவன் காரியங்கள் மாயா சாலங்களாய் மருவி மிளிர்கின்றன. நேரே போரில் ஊக்கி நின்றவன் வேறே ஒர் உபாயத்தை நோக்கி உறுதி நாடினன். - ஒள்ளியது = உயர்ந்த அறிவால் ஒர்ந்து தெளிந்தது. o தன்னையுடையானுக்குச் சிறந்த கீர்த்தியைக் கந்து நிரங்கர மாய் ஒளி புரிந்து வருவது ஒள்ளியது என வந்தது. அதனேயுடை யவன் ஒள்ளியன் என நின்ருன். - -

"வெள்ளிலே வேற்க ளுளேச் சிவகன் வினே வென் ருன் ஒள்ளியன் என்று மாந்தர் உவாக்கடல் மெலிய ஆர்ப்பக் கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன் உள்ளகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க்கெல்லாம்" (சீவக சிந்தாமணி, 741)