பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3848 கம்பன் கலை நிலை விணு கானத்தில் வெற்றி பெற்றுள்ள சீவகனை ஒள்ளியன் என்று இதில் குறித்திருக்கல் கூர்ந்து சிங்திக்கத்தக்கது. இந்தக் கவியின் சாயலை நம் கவியோடு இணைத்து நோக்குக. “ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்.” (குறள், 714) எனக் தேவர் இங்ங்னம் உரைத்திருக்கலால் ஒள்ளியதன் உயர்நிலை உணரலாகும். உள்ளம் உயர்ந்த நல்ல மதிமான்கள் என்றும் உவந்து கொண்டாடும்படி அன்று இராமன் உணர்ந்து கொண்டான் ஆதலால் அவ் வுணர்வுறுதி ஒள்ளியது எனப் புகழ்ந்து கொண்டாட வந்தது. உடனே படைகளை ஏவிக் கலகத்தை மூட்டி ஊரை அழிக் காமல் பொறுமையோடு மருவி நின்று ஒரு தாதுவனே நேரே அனுப்பிப் பார்ப்போம் என்று இதமான சமாதானத்தையே பெருந்தன்மையுடன் இவ் வீர வள்ளல் கருதியுள்ளமையால் அதனே ஒள்ளியது என்று தெள்ளித் தெளித்து உலகம் அறிய உணர்த்தியருளினர். தான் கருதித் துணிக்கதைத் கன் மூப்பாகச் செய்து விடா மல் உரிய துணைவனிடம் உரிமையோடு உசாவி யிருக்கிருன். தனது அருமைத் தம்பியிடம் உரையாமல் விபீடணனிடம் உரைக்க நேர்ந்த்து விநயம் மிகவுடைய து. மானச கத்துவங்கள் எவ்வழியும் இவ் வித்தகனிடம் உய்த்துணர வுள்ளன. நண்புரிமையில் பண்பாடுகள் பெருகி வருகின்றன. நீதிமுறை இராச கங்திரம் சொல்வன்மை முகலிய பல்வகை நீர்மைகளும் இவ் வில் விரனிடம் நல்ல ஒளிகளை விசி எல்லா வழிகளிலும் இனிது விளங்குகின்றன. *. விடணு! இங்கிருந்து ஒரு தாதுவனே அனுப்பி இலங்கை வேந்தனுடைய மன நிலைகளை அறிய விரும்புகிறேன்; சீதையை நம்பால் விடுவான் ஆனல் அவனே நாம் உயிரோடு விட்டு விடு வோம்; இல்லையானுல் கொன்று கொலைத்து வென்றி பெறு வோம்; இன்னவாறு என் உள்ளம் கருதுகின்றது; இது தரும மான நீதிமுறை ஆதலால் இப்படிச் செய்வதே நல்லது என்று தோன்றுகின்றது; உன் கருத்து என்ன?. என இவ்வண்னம் இக் கோமகன் விபீடணன் பால் வினைய மாயப் வினவியுள் ளான்.