பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3854 கம்பன் கலை நிலை இளையவன் சொன்னதைக் கேட்ட பொழுது இராமன் இப்படிப் புன்னகை செய்திருக்கிருன். இக்க முறுவலுக்குப் பொருள் என்ன? தம்பியின் உறுதியும் ஊக்கமும் கரும விரங்க ளும் கருத வந்தன. தமக்கு இராவணன் இழைத்துள்ள கொடு மைகளையெல்லாம் குறித்துக் காட்டித் தம் கங்கையாகிய சடாயு வைக் கொன்ற அந்தக் கொலே பாதகளுேடு சமாதானம் செய் யவே கூடாது; போரே நாம் செய்ய வுரியது; வேறே யாதும் கருதலாகாது; பொருது வெல்வதே நமது கருமமும் கடமையும் ஆம் என இன்னவாறு தம்பி கூறிய உறுதிமொழிகளைக் கேட்டுக் குறுமுறுவல் செய்து பெரு மகிழ்வோடு இந் நம்பி அவனை இனிது நோக்கி மறுமொழி கூறினன். - அயர்த்திலன் முடிவும் அஃதே ஆயினும் அறிஞர் ஆய்ந்த நயத்துறை நூலின் நீதி நாம்துறந்து அமைதல் கன்ருே? புயத்துறை வலிய் ரேனும் பொறையொடும் பொருந்தி வாழ்தல் சயத்துறை அறனும் அஃதே என்றிவை சமையச் சொன்னன். இளையவனே நோக்கி இராமன் இங்ஙனம் நயமா உரைத்தி ருக்கிருன். உரைக் குறிப்புகளில் உணர்வு கலன்கள் ஒளி புரிகின் றன. நேர்ந்துள்ள பகைவன் மிகவும் தீயவன்; நமக்குக் கொடிய துயரங்களைச் செய்திருக்கிருன், தாதனே அனுப்புதற் குரிய காரணம் யாதும் இல்லை; அனுப்பவே கூடாது; அனுப் பினுல் பிழைகள் பல நேரும்; முன்னம் செய்து கொண்டுள்ள வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் பொருட்டு விரைந்து நாம் போர் புரியவே வேண்டும்; மறந்தும் வேறு கருதலாகாது” என்று நேரே கம்பி குறித்த குறிப்புகளுக்கெல்லாம் சுருக்கமா இரண்டு வார்க்கையில் பதில் உர்ைத்திருக்கிருன். அயர்த்திலன்; முடிவும் அஃதே. இந்த வார்த்தையின் கனத்தைக் கருதிக் காணுங்கள். உரையாடுக்திறம் இக் குலமகனிடம் தலைமையாக அமைந்துளது. 'தம்பி! நீ பேசின. யாவும் என் உள்ளத்தில் பதிந்துள்ளன; நான் யாதும் மறந்து விடவில்லை, பகையை வேரோடு களைந்து தொலைக்கவே கருதி யிருக்கிறேன்; நீ கூறியபடி போரே விரைந்து மூளும், வெற்றியும் பெறுவோம்’ என்று இக் கொம்