பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3863 கம்பீரமான தோற்றத்தையும் பாய்ச்சலையும் சிங்கம் தெரியச் செய்தது.விண்மிகை என்றதுபோனவழியின் புலன்துலக்கியது. வேகத்தையும் விர வெற்றிகளையும் அம்பு விளக்கி நின்றது. இராம தாதன் இராமபாணம்போல் இராவணனிடம் போயி ருக்கிருன். இலங்கை வீதியில் அவன் கண்ட காட்சிகள் கருத் தைக் கவர்ந்து வியப்பை விளைத்தன. அந்த நகரின் அதிசய அழகுகளையும் திருவின் போகங்களையும் கினைந்து கினைந்து நெஞ் சம் உவந்தான்: 'ஆ' என்ன போகம்! என்ன காட்சி! என்ன மாட்சி!” என இன்னவாறு எண்ணி எண்ணி வியந்து விதிகள் பலவும் கடந்து இராவணனுடைய அரண்மன்ையை அணுகினன். எவ்வழியும் திவ்விய மகிமைகளோடு செவ்வி சிறந்து திகழ்கின்ற பெரிய மணி மாளிகையிடையே இனிய அரியணையில் விற்றிருக் கின்ற அவனைத் தாரகின்று நோக்கினன். தேவரும் தலைவனங்க மேவி விளங்குகின்ற அவனுடைய இராச கம்பீரங்கள் அரிய பல அதிசயங்களை விளைத்தன. நிலைமைகளைக் கருதினன்: 'கல் லையும் மரங்களையும் கொண்டு கடலை அடைத்துப் ப ைட க ளை நடத்தி வந்து விட்டோம்; பகைவனை எளிதில் வென்று விடலாம் என்று எண்ணுவது பெரும் பிழை. படைக் கடல்களோடு பொங்கியுள்ள எதிரியான இக்க விரக் கடலைக் கடந்தபோது தான் நாம் நேரே கரை கண்டவராவோம். இவனே வெல்லவல் லவர் யார்? கோதண்டபாணியான நம் ஆண்டவன் இவனைக் கொன்று ஒழித்தாலன்றி வேறு யாரும் வென்றுகொள்ள CHOيا யாது. இவனேடு நேரே மல்லாடி மகுடமணிகளைப் பறித்து வந்த எனது சிறிய தங்கையின் அதிசய வெற்றி அதி செய்ய வுரியது. இந்த விர நகரில் தனியே புகுந்து அரக்கர் பலரை வென்று -oலாண்மையோடு மீண்டு வந்த அனுமானுடைய வீரப் பிரதாபங் கள் திசை நோக்கித் தொழத் தக்கனவே; நம் மாருதியின் அற் புத ஆற்றல் நமது மரபுக்கெல்லாம் பெரு மகிமையைத் தங்துள் ளது. அந்த அதிசய விரன் வக்கபடி நானும் இன்று வந்துள் ளேன்; முடிவு என்ன ஆகுமோ?” என்று இன்னவாறு எண்ணி நின்றவன் விரைந்து உள்ளே புகுந்து இராவணன் எதிரே போப் அதி கம்பீரமாய்த் துணிந்து கின்ருன். விடுஞ்சுடர் மகுடம் மின்ன விரிகடல் இருந்தது என்னக்