பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இராமன் 3275 உயர்ந்துகொள்ள வேண்டும். அடிமைத்தனம் ஒழிந்து அரச குய் வாழும்படியான காலம் நேர்ந்துள்ளமையிஞலேகான் இன்று நீ என்னிடம் வந்து சேர்ந்தாய். உரியவனுக்குப் பிரிய மாச் செய்யவுரிய அரிய உதவியை நானும் ஆற்ற நேர்ந்தேன்; இது எனக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. . . " சீதையைப் பெற்றேன் உன்னைச் சிறுவனும் ஆகப்பெற்றேன் தன்னுடைய பேற்றை வியந்து இராவணன் இப்படிப் பேசியிருக்கிருன். இது எவ்வளவு பேதைமை காம வெறியனுப்ப் பித்துப் பிடித்திருத்தலால் சித்தம் களித்துப் பிதற்ற நேர்ந்தான். நல்ல காதலியும். செல்ல மகனும் கிடைத்ததைப் போல் உள்ளம் களித்துப் பேசியிருப்பது அவனது ஊன நிலையை உணர்த்தியுள்ளது. === யாதும் கருதி யுணராமல் கண்டபடியெல்லாம் பேசினவ னைக் கவி இப்படி நமக்குக் காட்டியிருக்கிருர். அழிந்து போகக் துணிந்துள்ளவன் ஆதலால் சொல்லத்தகாத சொல்லைத் துடுக் காய்ச் சொல்ல நேர்ந்தான். நாச காலம் சண்ணியுள்ளமையால் நீச கிலேயில் கிமிர்ந்து பேசினன். இறுதி= முடிவு, அழிவு. பெற்றுள்ள பேறெல்லாம் இற்று அடியோடு அழியப் போகிருன் என்பதை இறுதி என்னும் சொல்லால் உறுதிபெற உரைத்தார். அழிய நேர்ந்துள்ளவன் அவல வுரைகள் ஆடிஞன். காண்பான் என எதிர்காலத்தால் கூருமல் கண்டான் என இறந்த காலத்தால் குறித்தது அவன் விரைந்து அழிக் துபடுதல் தெரிய குறிப்பு மொழிகள் கூர்ந்து நோக்கத் தக்கன. _ கசி -- சாகத் துணிந்தவன் விவேகம் குன்றி வெறிமண்டிப் பேசி யிருக்கிருன். ட்சீதையைப் பெற்றேன் என்றவன் செத்தவனே எனக் கவி செயிர்த்து உரைத்துள்ளார். துனித்தமொழி தனித்து வந்துள்ளது; அந்த வரவு கிலே துணித்து நோக்கத்தக்கது. நீதிக் கேடான கொடிய வார்த்தை ஒருவன் வாயிலிருந்து வருமானல் அது அவனுடைய ஆயுளைக் குறைத்து அழிவை விளேக்கும் என்பது ஈண்டு துணுகி யுணரவங்தது.