பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3878 கம்பன் கலை நிலை தது உயர்வும் இழிவும் ஒருங்கே உணர வந்தது. இராமனைக் தொழுது தாகனப் எழுந்த பொழுது சீயம் விண்மிசைப் படர்வதே போல் என்று அங்கதனைக் கவி அங்கே குறித்தார். இங்கே இவன் வாக்குமூலமாகவே அதனை வலியுறுத் திர்ை. கன்னே உயர்த்தி எதிரியைத் தாழ்த்தியது இகலால் எய்தி யது. மாறுபாடு மண்டியுள்ளமையால் வார்த்தை சீறி வந்தது. -- -அமரரும் வணங்க அரசு புரிகிற ஒரு சக்கரவர்த்தியை இப்படி இழிவுற உரைத்தது தகாது ஆயினும் நிலைமை திரிந்த மையால் புலேமொழி புகுந்தது. பாவ விளைவால் அழிய மூண் டுள்ளவன் எதிரே பழிமொழியும் நேரே நீண்டு எழுந்தது. அதிசய வீரனை வாலியின் புதல்வன்.ஆதலால் இராவணனை இங்ங்னம் அங்கதன் எளிதாக இகழ்ந்து பேச நேர்ந்தான். இவனுடைய நெஞ்சத் துணிவும் வாய்த் துடுக்கும் வெஞ்சின வேகமும் இங்கே கொஞ்சம் மிஞ்சி யிருக்கின்றன. இராம பத்தினியைக் கரவாய்த் திருடி வந்தான் ஆதலால் அந்தத் திருட்டுத் தொழில் காய்ச் செயல் என்பதை இவன் வாய்ச் சொல் வழங்கியது.1 தன்னுடைய ஆண்டவனுக்குக் கொ டி ய அல்லலையும் நெடிய அவமானத்தையும் விளைத்துள்ள தீயவனை இச்சேயவன் உள்ளக் கொதிப்போடு இப்படி எள்ளி இகழ நேர்ந்தான். தன்னைச் சிங்கம் எனவும் இராவணனை நாய் எனவும் உவ மைக் குறிப்பால் உரைத்தது உள்ளக் கருக்கை விளக்கியதோடு மேலே விளைய உள்ள வெற்றி நிலைகளையும் விளக்கி நின்றது. இலங்கேசன் எனப் பெரு மகிமை பெற்றிருந்தவன் ஒரு бm//Tбогдг குமாரன் வாயால் இவ்வாறு ஈனமாய் வையப்பட்டான். தீவினைகள் மூண்டபொழுது எவ்வளவு பெரியமனிதனும் யாண் lடும் இழிந்துபட நேர்வான் என்பது இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ள வந்தது. வசைமொழி வயிரம் தோய்ந்து பாய்ந்தது: o வாய்த் துடுக்காய் அங்கதன் இங்கனம் கூறியதைக் கேட் டதும் இ ர | வ ன ன் கொதித்துச் சிறி இவனைக் கொன்று தொலைக்க மூண்டு வென்றி வாளை விரைந்து எடுத்தான். கனல் எனப் ப்ொங்கி அங்கனம் கடுத்து எடுத்தவன் ඖෂේ குர ங்கைக்