பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3883 விழுமிய நிலையில் கெழுமி யிருக்க அங்க அழகிய கூந்தல் மாசுபடிந்து சடையாய்த் திரண்டு கிடக்க மடையா! செய்துள் ளாயே! நீ விளங்குவாயா? அடியோடு அழிந்து போக இங்கத் கியசெயலைச் செய்ய நேர்க்காப்! அரக்கிகள் யாவரும் தலைவிரி கோலமாய் அழுது தவிக்க உன் குல முழுவதும் நாசமடையச் செய்த நீசச் செயல் இது; இதிலிருந்து விலகிப் பிழை என்று நிலைமையை நினைவுறுத்தி நேரே தெளிவுறுத்தினன். * தேவி விரித்தகுழல் பாவியாகிய உன் குலத்தை அடியோடு முடித்தாலன்றி முடியாது என்று தெரிகின்றது என முடிவையும் முடிவாக வுணர்த்தினன். முடிவு நேராமல் விடிவு கண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது என அதனை விழி தெரிய விளக்கினன். ** தொழுது வாழ் என்றது உடன்படிக்கையின் உறுதிகான வந்தது. வாழ வேண்டுமாயின் இவ்வாறு செய்ய வேண்டும். இராமனை வணங்கி அவன் ஏவலின் வழியே இசைந்து வாழலாமே யன்றி வேறு விதமாய் நீ வாழ இயலாது என வாழ்க்கைத் திட்டத்தையும் வரைக்த குறித்தான். இவ்வாறு வாழ மனமின்றிச் சாகத்தான் துணிந்துள்ளாய்! என்ருல் இப் பொழுதே வெளியேறி என்பின்னே வா என்று விரவாதமாய் அறை கூவி நேரே போருக்கு அழைத்தான். என்பின் புறப்படு என்றது இறப்பின் திறப்பாடு தெரிய எழுந்தது. போருக்கு மூண்டு வீரப் படைகள் ஊரைச் சுற்றி ஆரவா ரம் செய்து நிற்கின்றன; நீ பேடிபோல் விட்டுக்குள் மறைக் திருக்கிருப்! விரைந்து வெளியேவா காலம் தாழ்த்தாதே! என்று கடுத்து மொழிந்து அடுத்து வரும்படி ஆர்த்து விரைந்தான். கலகம் நேர்ந்தது = இந்த உரைகளைக் கேட்டதும் இராவணனுடைய உள்ளம் கொதித்தது. உருத்துச் சீறி இவனேக் கொன்று தொலையுங்கள் என்று வென்றி விருேடு வெகுண்டு கின்ருன். அடலாண்மை கள் மிகுந்த மல்லர் நால்வர்கள் ஒல்லையில் பாய்ந்து அங்கதனைப் பற்றிக் கொண்டனர். அங்கனம் மூண்டு பற்றவே அந்த சால்