பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 3891 இடையுறு கருமத்தின் எல்ல கண்டவர் கடையுறு நோக்கினில் காணும் காட்சியான். வற்கலை உடையை வரிக் து சுற்றிப் போருக்குக் கச்சை கட்டி வந்த ஆளே இந்தவாறு கவி வரைந்து காட்டியிருக்கிரு.ர். வினைகளின் எல்லையைக் கடந்து தனி நிலையில் கலை சிறந்து நிற்கிற தத்துவஞானிகள் முடிவான யோகக் காட்சியில் கண்டு களிக்கின்ற மூலப்பொருளே இந்தக் கோலம் பூண்டு போருக் குப் புறப்பட்டுள்ளது என இங்ங்ண்ம் புலப்படுத்தியுள்ளார். யாரும் எளிதில் காண முடியாத அந்தக் காட்சியான் குரங்குகள் முதல் எல்லாரும் நேரே காணும்படி வில்லை எந்தி இந்த விரக் காட்சியில் வெளிவந்திருக்கிருன். காவிய நாயகனு டைய திவ்விய நிலைமையைச் செவ்வி நேர்ந்த போதெல்லாம் சிங் தித்து உணரும்படி விேய ஒவியமாக் கவி காட்டி வருகிருர், கோதண்டத்தைக் கையில் ஏந்தி இராமன் போர்க்களத் துக்கு வந்தபோது சேனைத் திரள்களெல்லாம் சிங்தை களித்தன. படைகளின் பின் அணியில் இலக்குவன் யாவும் கூர்ந்து நோக்கி விரத்திறலோடு விறுகொண்டு கின்ருன். ஊழிக் காலத்தில் உல கங்களை யெல்லாம் ஒருங்கே அழிக்க மூண்டு உருத்திர மூர்த்தி உக்கிர வீரமாய் உருத்து நிற்பதுபோல் அங்கே ஊக்கி நின்ற கம்பி அருகே இங் சம்பி அனுகினன்; அப்பொழுது எங்கும் உவகை பொங்கி எழுந்தது. - . வாணர விரர்கள் எவ்வழியும் வெவ்வலியாளராய் விருேடு போராடினர். இருதிறப் படைகளும் ஒரு திறத்திலும் குன்ருமல் பொருதிறத்தில் முனைந்தன. கங்கள் சக்கரவர்த்தி தேரேரிப் போர்க் களத்திற்கு நேரே வந்திருத்தலால் அரக்கருடைய சேனைகள் அதிசய உற்சாகக்கோடு யாண்டும் மூண்டு பொரு கன. இருவகையிலும் படைகள் மாண்டன. வானவர் தான வர் எவரையும் எளிகேவென்று வெற்றிவிரர் எனக் களிமிகுத்து நின்ற அரக்க விரர்கள் வானரங்கள் எ தி ர்ே மானமழிந்து மடிந்து விழ்ந்தனர். சிங்கங்களைக் கண்ட நரிகளைப்போல் அரக் கர்களைக் கண்டால் குரங்குகள் பதறிச் சிதறி ஓடிப் போய்விடும் என்று உறுதி பூண்டு ஊக்கி வந்த பெரிய சேனைக் கலைவர்களும்