பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3895 வில் வீரன் என உலகமெல்லாம் உவந்து புகழ்ந்து கொண் டுகின்ற அங்க இராமனுக்கு அருமைக் கம்பி என உரிமை கோன்ற உரைத்தார் ஆதலால் வீரற்கு இளையவன் என்ருர். வில் ஆடலில் அந்த அண்ணனைப்போலவே இந்தத் தம்பியும் அதிசய, கிலேயினன் என்பது துதி செய்ய வந்தது. போரில் எவ்வழியும் வெற்றி பெற்று விறு கொண்டு நின்ற அரக்கர் பலர் ஈண்டு மாருப் மாண்டு மடிந்துள்ளனர். விழுந்துள்ள பினக் குவியல் கள் வியப்பை விளைத்து நின்றன. ஒரு வில்லாளி எதிரே பல்லா யிரம்கிருதர் பட்டழிக்கதைக் கண்டு பொல்லாக இராவணன் உள் ளம் கொதித்தான். நெஞ்சக் கொதிப்பு நெடுந்தியாய் நிமிர்ந்தது. இலங்கைவேந்தன் மனம் எனும் காலச்செந்தி காய்ந்தது. இலக்குவல்ை அரக்கர் திரள் அழிந்துபட்டதை அறிந்து இராவணன் சினந்து கனன்றிருக்கும் நிலையை இது வனேந்து காட்டியுள்ளது. வடவைத் திபோல் உள்ளம் கொதித்து அவன் உருத்திருக்கிருன். காலச் செந்தீ என்றது அவனுடைய கோபத் தின் உக்கிர வேகத்தையும், அதனால் ஞாலத்தில் விளையும் அழி வையும் தெளிவாக அறிந்துகொள்ள வந்தது. இவ்வாறு கொதித்துச் சீறிக் கன் தேரைக்கடாவி விரைந்து வந்து இலக்குவனே எதிர்த்தான். கூற்றுவனும் அஞ்சும்படி ஏற்றம் கொண்டுள்ள அவன் ஏற்றிய வில்லோடு எதிர் வந்து முதிர் போரில் மூண்டு நிற்கவே இளையவன் இளநகை புரிந்து ஒரு மொழி புகன்ருன்: அன்று காத்து நின்ற என் காவலை வஞ் சித்துக் கள்ளம் புரிந்து போன ஏ கள்ளனே! இன்று என் கண் எதிரே வந்து கிடைக்காப்! இனி நீ மீண்டுபோக முடியாது; மாண்டே படுவாய்!” என்று இங்ங்னம் இவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் வில்லிலிருந்து அம்புகளை எல்லேயில்லாதபடி ஒல்லையில் தொடுத்தான். அவற்றையெல்லாம் விரைவில் அறுத்து ஒழித்து இவன் கடுத்து எய்தான். இளையவன் வவிய பானங்களையெல்லாம் பயன்படாமல் செய்து இராவணன் வியன் போர் புரிந்தான். விர வெறி மண்டி அவன் கோரமாய்க் கொதித்துக் கொடுஞ் சமர் புரிவதை மாருதி கூர்மையாய் நோக் கின்ை. ரேமோடு பாய்ந்து நேரே வந்து கின்றன். போருக்கு மூவண்டு நேருக்கு நேரே ஆரவாரமர் வீர வாதங்கள் கூறினன்.