பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3900 கம்பன் கலை நிலை காலனும் காண அஞ்சுகிற இலங்கை வேந்தனே வானரங் கள் சூழ்ந்து வளைந்து கொண்டு கல்லையும் மண்ணையும் மரங்களை யும் வாரி எறிந்து கொல்ல மூண்டகே; இப்படியும் ஒரு காலம் நேர்ந்ததே! என்று மேலிருந்து நோக்கிய கானவர் யாவரும் வியந்து கின்றனர். தன்மேல் ஏவிய படைகளை யெல்லாம் கடை யற விலக்கி மானக் கொதிப்போடு மண்டி ஏறி வானரங்களை இராவணன் வகைத்து ஒழித்தான். பெரிய படைத் தலைவர்கள் எல்லாரும் படுகளத்தே பட்டு உருண்டனர். அவன் ஆற்றிய வில்லாடலால் யாவரும் அல்லலடைந்து மருண்டனர். பானங் கள் பாய்ந்த திக்கெல்லாம் பிணக்குவியல்கள் பெருகி நின்றன. உதிரங்கள் நிறைந்து பந்திபக்தியா நினங்கள் குவிந்து கிடந்தன. அந்தி வானகம் ஒத்ததன் அமர்க்களம் உதிரம் சிந்தி வேலையும் திசைகளும் கிறைந்தன சரத்தால் பந்தி பந்தியாய் மடிந்தது வானரப் பகுதி வந்து மேகங்கள் படிந்தன பிணப்பெரு மலைமேல். (1) Lh நீலன் அம்பொடு சென்றிலன் கின்றிலன் கிலத்தான்; கால ர்ைவயத் தடைந்திலன் ஏவுண்ட கவயன்; ஆலம் அன்னதோர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்; சூலம் அன்னதோர் வாளியால் சோம்பினன் சாம்பன். (2) மற்றும் விரர்தம் மருமத்தின் அயிலம்பு மடுப்பக் - கொற்ற விரமும் ஆண்டொழில் செய்கையும் குறைந்தார்; சுற்றும் வானரப் பெருங்கடல் தொலைந்தது தொலேயாது உற்று கின்றவர் ஓடினர் இலக்குவன் உருத்தான். (3) - இராவணன் எதிரே வானரங்கள் பட்டிருக்கும் பாட்டை இப்பாடல்கள் காட்டி நிற்கின்றன. உள்ளம் கொதித்து உருத்து வேலை செய்திருக்கிருன். அடுத்து அடுத்து அம்புகளைக் கடுத்துக் தொடுத்திருத்தலால் அழிவு நிலைகள் எவ்வழியும் அதிகமாயின. பந்தி பந்தியாய் மடிந்தது வானரப் பகுதி குரங்குகள் கூட்டம் கூட்டமாய்ச் செத்து விழுந்திருக்கும் நிலையை இதனல் உய்த்துணர்ந்து கொள்ளுகிருேம். இலங்கை வேந்தனுடைய சர வேகங்களையும் கர வேகங்களையும் இந்தச் சாவுகள் காட்டியுள்ளன. அழிவு நிலைகள் அவலமாயின.