பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3904 கம்பன் கலை நிலை கொடுத்துத் தடுத்துப் பார்த்தான்; எய்த பகழிகளையெல்லாம் எரித்து ஒழித்து ஊழிக் தீயைப்போல் அது உருத்து வந்து மார் பில் பாய்ந்தது. பாயவே பிடித்த வில்லோடு இலக்குவன் கீழே விழ்ந்தான். இந்த வில் விரன் சாயவே வானர சேனைகள் எல் லாம் வாய்விட்டு அலறி மறுகித் தடித்தன. அமரரும் அலமந்து கவித்தார். மாண்டுபோனன் என்றே யாவரும் மயங்கி ஓடினர். கரையில் கனியே கிடக்கின்ற இலக்குவன இலங்கைக்கு எடுத் துக் கொண்டுபோய் விடவேண்டும் என்று இராவணன் கருதிக் கடுத்தான்: தேரை விட்டுக் கீழே இறங்கி விரைந்து வந்து உற்று நோக்கினன்: ஊக்கித் தாக்கினன். சிறிதும் அசைக்கமுடிய வில்லை; பெரிதும் திசைத்தான்; மீண்டும் மூண்டு எடுத்தான்; யாதும் முடியாபை யால் முடிவு கருதி நின் முன்; அப்பொழுது அதிவேகமாய் அனுமான் காவி வந்து இலக்குவனே எளிகே எடுத்து மார்பில் அனைத்துக்கொண்டு மாயமாய் விரைந்து அய லே பாய்ந்து போனன். கீழே கனியே கிடந்த தனது அருமைக் குட்டியை வயிற்றில் சேர்த்து இறுக்கிக்கொண்டு நெடிய மரச் செறிவுள் கடிது புகுந்த பெரிய ஒரு காய்க் குரங்குபோல் அனுமான் இளையவனே அனைத்துச் சென்ற செயல் அன்று ஒர் விழுமிய காட்சியாய் விளங்கி விழி களிப்ப நின்றது. வேலால் எறிந்து எதிரியைக் கொன்று விட்டோம் என்று வென்றி விருேடு நின்ற இராவணன் அனுமான் செய்கதைக் கண்டதும் வெட்கி மீண்டான். துக்கம் நீண்டது. அங்க வேலின் கடுமையும் விளைத்த கொடுமையும் எவரையும் திகைக்கச் செய்தன. இந்த நிகழ்ச்சிகள் கவிகளில் ஒவிய உரு வங்களாய் ஒளிபெற்றுள்ளன. அயலே வருகின்றன காண்க. வில்லில்ை இவன் வெலப்படான் எனச்சினம் விங்கக் கொல்லு நாளுமின் றிதுவென ச் சிந்தையில் கொண்டான் பல் லி ல்ை இத முதுக்கின ன் பருவலிக் கரத்தால் எல்லின் நான்முகன் கொடுத்ததோர் வேல் எடுத்து எறிந்தான். எறிந்த காலவேல் எய்த அம்பு யாவையும் எரித்துப் பொறிந்து போயுகத் தியுக விசையினில் பொங்கிச் செறிந்த தாரவன் மார்பிடைச் சென்றது சிந்தை அறிந்த மைந்தனும் அமர்நெடுங் களத்திடை அயர்ந்தான். (2)