பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3906 கம்பன் கலை நிலை அனுமான் இடையே பாப்ந்து ஆர்வமீதார்க் து இளவலை மார்பில் அனைத்து ஆவலோடு அயலே வாவிப் போனதும், அம்புதக் காட்சிகளாய் மருவியிருக்கின்றன. பரிவும் பண்பும் எவ்வழியும் பெருகி மிளிர்கின்றன. உரிமையுணர்ச்சிகள் ஒளி புரிந்துள்ளன. விரத்திறலை முதலில் பாராட்டி நின்றவன் உடனே கோரக் கொலையைச் செய்யத் துணிந்தது அவனது கொடுங் தீமையை விளக்கி நின்றது. வஞ்சக் கொடுமை நெஞ்சப் புலையை நேரே காட்டியது. கஞ்சில்ை செய்த கெஞ்சின்ை என்றது பொல்லாத அவனு டைய மனக் கொடுமையை நினைத்துணர வந்தது. அமர்க்களத் தில் அடிபட்டு வீழ்ந்து கிடந்தவனைக் கொல்லும் கொலை நோக் கோடு தாக்கிக் கொண்டுபோகக் துணிந்துள்ளான் ஆதலால் அவனது கெஞ்சம் சஞ்சில்ை செய்தது என அஞ்சி அயரும் படி குறித்தார். இரக்கமற்ற அரக்கத் தன்மையின் பெருக்கம் அவன்பால் பெருகியுள்ளமை வெளியே கெரிய வந்தது. அரக்கர் தலைவனது நிலைமையைச் சுருக்கிச் சுட்டினர். சிவபெருமானேடு வெள்ளியங்கிரியைப் பண்டு வேரோடு எடுத்த அவன் அன்று இலக்குவனே எடுக்க முடியாமல் வெள்கி கின்றது வியப்பாப் விரிந்து உள்ளி உணரும்படி ஒங்கி நின்றது. இளையவனே அவன் கழுவி எடுத்த காட்சி விழி களிப்ப வங் துள்ளது. கரிய பெரிய கடல்போல் இராவணன் கம்பீரமாய் கின்ருன்; அவனுடைடி இருபது கைகளும் அலைகளைப் போல் அலமந்து அசைந்தன; அந்தக் கைகளிடையே கிடக்க இலக்கு வன் சந்திரனேப்போல் விளங்கினன். அழகிய பூரண சந்திரன் கடலின் அலைகளிடையே ஒளி செய்து மிளிரும் விழுமிய காட்சியை இங்கே வியந்து நோக்கி உவந்து நிற்கிருேம். தசமுகன் கடல் ஒத்தான்; கரங்கள் அலைகள் ஒத்தன: இளையவன் மதி ஒத்தான். உவமானங்கள் உணர்வுக் காட்சிகளாய் உவகை சுரங்துள்ளன. வானில் ஒளிவிசியுள்ள சந்திரன் அலைகடலில் விளங்கித் கோன்றிலுைம் அதனை யாரும் பற்/லமுடியாது; அவ்வாறே