பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3606 கம்பன் கலை நிலை யுடையவரிடமே கண்ணியமான வணக்கம் கனிந்திருக்கும் என எதிர்மறையாப் உணர்த்தியுள்ள இப் பொது மறைக்கு விதி முறையான ஒர் மெய்ச் சான்ருய் அனுமான் ஈண்டு விளங்கி நிற்றலை உளங் கூர்ந்து நோக்கி உவந்து கொள்ளுகிருேம். 'சிறிய கேள்வியர் கழியவும் செருக்குவர்” எனக் கல்வி விரரான நக்கீரர் உரைத்திருத்தலால் செருக்கின் சிறுமை அறிய லாகும். கல்வி கேள்விகள் பெருகியபொழுது அங்கே நல்ல நீர்மைகள் நிறைந்து நிற்கின்றன. பணிவின்றிச் செருக்கி நிற்பவர் சிறியராய்ச் சீரழிகின்ரும். |. பணிவுடையராப் அடங்கியிருப்பவர் பெரியராய் மேன்மை பெறுகின்ருர். அடக்கம் மணிகரை அமரராக்கி யருளுகிறது. மேன்மையான குன நீர்மைகள் யாவும் அனுமானுடைய பான்மைகளாய் அமைந்திருக்கின்றன. அங்கச் சீலங்களைக் கைக்கொண்டு ஒழுகி மாந்தர் மாண்புற வேண்டும் என்று நம் கவிஞர்பிரான் அவாவியிருக்கலால் குண நலங்களை இடங்கள் தோறும் சுவையாக உணர்த்தி வருகிரு.ர். அனுமான் பேசியது 1. துணங்கிய கேள்வியனை அனுமான் வணங்கிய் சென்னி பனப் வாய் மொழியலானன். கரும சங்கடங்கள் பல எதிரே நேர்ந்திருந்தமையால் இந்தக் கரும வீரன் அதிசய சாதுரிய மாய்ப் பேச நேர்ந்தான். தன் குல வேங்கனை சுக்கிரீவனும், வேறு பல தலைவரும் கூறிய உறுதி மொழிகளை யெல்லாம் மறுத்து மாறு கூறவேண் டிய நிலையில் அனுமான் கிற்றலால் இவனது விசய வசனங்கள் விசித்திர கதியில் விளைந்து எழுந்தன. - முன்னவர் சொன்னவைகளை வெளிப்படையாக மறுத்து உரைப்பின் அது அவர்களுடைய மரியாதைகளைக் குறைத்தபடி யாம். ஆகவே அவ்வாறு நேராமல் யாவரும் உவந்து கொள்ளு மாறு உணர்வு கலம் கனிய இனிது உரையாடினன். 'தரும மூர்த்தி! இது வரை பேசிய பெரியோர்கள் எல்லா ரும் சுருதி யுத்திகளோடு தாங்கள் கருதிய உண்மையைத் தெளி