பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3916 கம்பன் கலை நிலை போர் விரராய் அடலாண்மையோடு வந்தவர் யாவரும் உடல் களும் அடையாளம் தெரியாதபடி ஒருங்கே மாண்டு மடிந்தனர். தன்படைகள் பாழானதை நோக்கி இராவணன் உ ள் ள ம் கொதித்து உருத்து மூண்டான். எதிரியின் சேனைகள் காசம டைங்கதை நோக்கி அமைதியாய் நின்ற இராமன்மீது இரண்டு பாணங்களை ஏவினன். எய்த அம்புகள் இராமன் தோள்மேல் விரைந்துபாய்ந்து ஊடுருவிச் சென்றன. பச்சை மலையின் உச்சி யிலிருந்து செந்நீர் வீழ்ந்ததுபோல் கோள்களில் கின்று இரத்தம் பெருகி ஓடின. H திரண்ட வாளிகள் சேவகன் மரகதச் சிகரத்து இரண்டு தோளினும் இரண்டு புக்கழுந்திட எய்தான். இராவணன் அம்பு தொடுத்து அடுதொழில் செய்துள் ளமையை இது காட்டியுள்ளது. கழுத்துக்குக் குறிவைத்தது கோள்களில் பாய்ந்து போயின. பராமுகமாய் கின்றபோது படுபழியாய் எய்த அவனது கொடுமையை நினைந்து இராமன் குறுமுறுவல் கொண்டான். தன்கோளில் ஒழுகிய குருதி கரை யில் விழுமுன்னரே எதிரி கையிலிருந்த வில் துண்டாய்விழுந்தது. முறுவல் எய்திய முகத்தினன் முளரியங் கண்ணன் மறுவி லாததோர் வடிக்கனே தொடுத்துற வாங்கி இறுதி எய்துநாள் கால்பொர மந்தரம் இடையிட்டு அறுவ தாமென இராவணன் சிலையினே அஆறுத்தான். தன் தோளில் எய்த வாளியை வியந்து சிறுககை செய்த - இராமன் அடுத்த கனத்தில் இராவணன் பிடித்திருந்த வில்லை இப்படித் துணித்து வீழ்த்தினன். ஊழிக் காற்றைப் போல் உக்கிர வேகமாய்ப் பாய்ந்து அவனுடைய சிலையை இராம பாணம் சிதைத்துத் துணித்து அழித்துப் போயுள்ளது. கால்பொர மந்தரம் அறுவதாமென அ றுத்தான். - இராமனது அம்பின் தன்மையையும் இராவணனுடைய வில்லின் வன்மையையும் இந்த உவமை வாசகம் நன்கு காட்டி யுள்ளது. கால்= காற்று. மக்கரம்=மந்தரமலே. யுக முடிவில் எழுகின்ற சண்டமாருதத்தால் மந்தரகிரி அழிவதுபோல் இவ்விரன் அம்பால் அத் தீரன்வில் அழிந்துபோ