பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 391.9,

ஒளிகள் நிறைக்க அரிய பெரிய மணிகளால் இராவன ைைடய மகுடம் செய்யப் பட்டிருந்தது; அகல்ை அது சூரியன் எனத் துலங்கி நின்றது. கடலில் கதிரவன் உதயம் ஆனதுபோல், இராவணன் முடி புனைந்திருக்கான் என முன்னம் మశీతో கூறியதையும் ஈண்டு நினைத்து கொள்ளுகிருேம். கதிரவன் தன்னை உண்ட கோளொடும் ஒலிகடல் வீழ்ந்ததும் ஒக்கும். சூரியனைக் கல்விய செம் பா ம்புபோல் இரா வணனுடைய, மகுடத்தை வவ்விக் கொண்டுபோய் இராமபாணம் கடலில், பாய்ந்தது என அகன் அடலாண்மையை இது காட்டியுள்ளது. மணிமகுடத்தின் மாட்சியும், அதனைத் துணிசெய்து விழ்த் திய அம்பின் காட்சியும் அதிசய உணர்ச்சிகளை விளைத்துள்ளன. சொல்லும் அத்தனை அளவையில் மணிமுடி துறந்தான் மகுடபங்கமான நே க்கை இது நேரே அளந்து காட்டியது. கண் இமைக்குமுன், மூச்சுவிடுமுன், வாய்ச்சொல் முடியு முன் என இன்னவா ஆறு வருவது காலத்தின் விரைவைக் கருதி யுனருமாறு விழி எதிரே தெளிவாக விளக்கி வருகிறது. அரிய ஒரு மின்னல் விசியதுபோல் இராம பானம் பாய்க் கது; இராவணனுடைய மகுடம் சின்னபின்னமாய்ச் சிதைந்து கடலில்போப் வீழ்ந்து கடிது மறைக்கது. | முடி இழக்க அவன் படி இழிந்து கின்ருன். இராச கம்பீரமாய்த் கனக்குப் பேரழகு தந்து வந்த மணி முடி மாயமாய் மறைந்து போகவே பாய்ந்துபோனவன் போல் செயல்கள் யாவும் ஒப்ந்து மயலோடு அவன் மயங்கி நின்ருன். மதி இழகீத அல்லும், ஞாயிறு இழந்த பகலும் ஒத்தனன். முடியிழந்த இராவணனை இங்ங்னம் படி அளந்து காட்டி' யிருக்கிரு.ர். ஒளிமணிஒழியவே மருளும் இருளும்.மருவி கின்றன. சந்திரனே இழந்த இரவும் சூரியனே இழந்த பகலும் இருள் மண்டியிருக்கும் ஆகலால் அங்க அல்லையும் பகலையும் எல்லை கெரிய எடுத்துச் சொல்லினர். மணி முடி இழந்து உள்ளம் ாாணி ஒளி குன்றி யுள்ளமையால் இராவணனுக்கு இருள் கிலே