பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3920: கம்பன் கலை நிலை கள் உவமைகளாய் வந்தன. உள்ளத்தில் துயர -இருள் சூழ உலகத்தில் பழி இருள் நீள அவன் நிலை குலைந்து நின்ருன். அந்த அவலநிலை உவமையால் தெரிய சேர்ந்தது. -

பகல் ஒளியாகிய சூரியனையும் இரவு ஒளியாகிய சந்திரனே யும் போல் மகுடம் ஒளி விசியிருந்தது; அ.அது ஒழிந்து போகவே இராவணன் இருளடைந்து இழிந்து நின்ருன். கரிய நிறத்தன் ஆதலால் இருள் இனக்கன் ஆயினன். - ..-. نسمة அகம் கரிந்து முகழ்கருகி மூச்செறிந்து பேச்சிழந்து கின்ற கிலே காட்சிக்கு வந்தது. என்றும் காணுக இழிவும் துயரும் பழியும் கண்டு பரிதாப நிலையில் அவன் மறுகி கின்ருன். - அவ்வாறு நின்றவன் எக்ககைய நிலையினன் என்பதை உய்த்துணர்ந்து கொள்ளும்படி கவி விக்ககவினேகமாய் விளக்கி யிருக்கிரு.ர். விளக்கம் அவனது வெற்றி நிலையைத் தலக்கியுளது. • *. வெல்லும் அத்தனே அல்லது தோற்றிலா விறலோன். இரா வணனைக் குறித்துச் சொல்லியிருக்கும் இது உள்ளி உணர வுரியது. போரில் மூண்டால் எவரையும் வெல்லுவனே அ ன் றி யாண்டும் யாதும் கோல்வி கண்டறியாக மேலான வெற்றி விரன் அன்று அவ்வாறு கீழாய் இழிந்து நின்ருன். பல்லாயிரம் அமரர்கள் ஒருங்கே திரண்டு வந்தாலும் தனி யே கின்று எளிகே வெல்லவல்லவன் இராமன் எதிரே படை களை யெல்லாம் இழந்து படு தோல்வி யடைந்து பரிந்துகின்ருன். அவனது பரிதாப நிலையை விளக்க வந்த கவி அரிய பல உண்மை களைக் கெளியச் செய்து அறிவின் சுவைகளை விளைத்துள்ளார். - - - கவிஞர் சொல். ஆற்றல் கல்நெடும் கவிஞர்ஒர் அங்கதம் உரைப்பப் போற்றரும் புகழ் இழந்தபேர் ஒருவனும் போன்ருன். எல்லாவுலகங்களிலும் ஏற்றம்பெற்று யாண்டும் புகழோடு வாழ்ந்து வந்த இராவணன் ஈண்டு நிலைகுலைந்து பழியடைந்து நின்றுள்ளமையான் அந்த நிலையைத் தெளிவாக விளக்க இந்த உவமை வந்தது. உறவாய் உற்ற ஒப்புமை உய்த்துணர உரியது.