பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 1. இராமன் 8981 மொழி கொடு; நீதி முறைகள் உலகில் நிலவிவரும்படி பல துறைகளையும் நலமுறச் செய்; உன் கம்பி விபீடணனை இலங் காதிபதியாக்கி முடி சூட்டி வைத்து அவனுடைய எவலே ஆவ லோடு செய்து வா! இவ்வாறு செய்து வருவாயானல் நீ உயி ரோடு வாழலாம்; இல்லையானுல் உன் கலைகளை அறுத்துத் தரை யில் உருட்டுவேன். இன்று கோல்வியடைந்து விட்டோமே! என்று நீ வருந்த வேண்டாம்; மீண்டும் போருக்கு வரலாம்; டம்பை நன்ருகத் தேற்றிக்கொண்டு. எல்லாச் சேனைகளையும் கருவிகளையும் ஒருங்கே சேர்த்து உக்கிரவீரத்துடன் உறுதியாய் அமர் செய்ய வா! என்னேடு நேரே போராடி மாண்டாலும் அது உனக்கு மிகவும் பெருமையாம். எப்படியும் நீ சாவது உறுதி; ஆவகை அறிந்து விரைந்து செய்; இனிமேல் உயிரோடு பிழைத்து நீ வாழலாம் என்பதை அறவே மறந்துவிடு; இலங்கை நாயக சேர்ந்துள்ளதை நினேந்து நெஞ்சம் கலங்காதே! இன்று உன்ளுேடு கடல்போல் திரண்டு வந்த சேனைகள் எல்லாம் ஊழிக் காற்றின் எதிர்ப்பட்ட பூளைப் பூவைப்போல் பாழாப் அழிந்து போயின; நீ நேரே கண்டிருக்கிருய்! நான் வேறே கூற வேண் டியதில்லை. ஈண்டு வினே கின்று என் காலத்தைக் கடத்துகின் ருப்! உன் ஊருக்குப் போ ஆறுதல் செய்துகொள்; முடியுமா குல் வேண்டிய ஆயத்தங்களோடு போருக்கு நாளைக்கு வா!' என இன்னவாறு இவ் விரமூர்த்தி இராவணனுக்கு விடை கொடுத்திருக்கிருன். - உணர்ச்சி வேகங்களும் அரிய பண்பாடுகளும் உரைகளில் ஒளி புரிந்து வந்துள்ளன. நிகழ்ச்சிகள் விசித்திர கதிகளில் விளைந்திருக்கின்றன. விர கம்பீரங்கள் வீறுகொண்டுகிற்கின்றன. தோல்வி படைந்தவன் மீண்டு இலங்கையை நோக்கிப் போகர்மல் ரணகளத்திலேயே அசையாமல் கின்றிருக்கிருன். அந்த நிலை கூர்ந்து சிந்தனே செய்து ஒர்ந்துகொள்ள வந்தது. போருக்கு மூண்டு வங்தோம், தோல்வி அடைந்தோம்; இனி மாண்டு மடியவேண்டுமே அன்றி மீண்டு போகலாகாது. மீளும்படியான உரிமையை வெற்றி பெற்றுள்ளவன் தக்கா லொழிய எந்த வகையிலும் யாண்டும் அயலே செல்லலாகாது” என்னும் விர நியமத்தை இராவணன் அங்கே விளக்கி கின்றுள் ளான். அவனது நிலை அதிசய நீர்மையாப் நிலவியுள்ளது.