பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3933 . நல்லதை ஒருவிக் ്ഥങ്ങ് மருவியுள்ளமையால் சேமாய் ே நாசமடைய நேர்ந்துள்ளாப்!” என அவனது அழிவு நிலையை விழிதெரிய விளக்கினன். மனத்திடை வலித்தி என்றது பாவத் தால் இழிவும் அழிவுமே நேரும் என அவன் உள்ளத்தில் உறுதி யாகத் தெளிந்து கொள்ளும்படி வலியுறுத்தியவாரும். பல்லாயிரம் படைகளோடு வந்த இராவணன் எல்லாம். இழந்து வெல்லாமல் இழிந்துள்ளான்; தனியே புகுந்த இர ாமன்' வென்று நின்றுள்ளான். அறக்கை இழக்கமையால் அவன் அந்த அவல நிலையை அடைந்தான்; கருமத்தையே என்றும் தழுவி யுள்ளமையால் இவன் இங்கனம் வென்றி விரளுய் விளங்கி வெற்றியின் உண்மையை விளக்கி நின்றன். -- வேல்அன்று வென்றி தருவது மன்னவன் - கோல்அதுTஉம் கோடாது எனின். (குறள், 546) அரசனுக்கு வென்றி கருவது நீதியான செங்கோலே; o வேல் அன்று என்னும் இது ஈண்டு எண்ணவுரியது. கோல் சீர்மை யுடையதாயின் வேல் கூர்மை யுடையதாய் வெல்லும் என்பது குறிப்பு. கருமதத்துவம் மருமமாய் இங்கே மருவியுளது. உள்ளே தருமம் இருந்தால் ஒழிய வெளியே வெள்ளம் போல் படைகள் பொங்கி வந்தாலும் எதிரியை அரசன் வெல்ல முடியாது என்பதை இலங்கை வேந்தன் நிலையால் ஈ ண் டு விளங்கி நின்றது. - தருமமே வலியது; தருமமே வெற்றி என்றபடி யாண்டும் அது மேலான மகிமையை விளைத்து வருதலால் அதனை ஈண்டு எடுத்துக் காட்டி எ கிரிக்கு இடித்து அறிவு ஊட்டினன். 'அறம் வெல்லும் பாவம் தோற்கும்”(இராம, வேல்,44) எனப்பின்னே குறித்துள்ளதும் இங்கே கூர்ந்து சிந்திக்கவுரியது. நல்லவர்க்குத் தருமதேவதை துணைநிற்றலால் அவர் வெற்றி பெறுகின்றனர்; அல்லவர்க்கு அஃது இல்லாமையால் அல்லலும் கோல்வியும் அடைந்து அவலம் உஆறுகின்றனர். கல்லவை புரியு மாந்தர் காந்தகம் பிழைத்து விழா, அல்லவை புரியு மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா;