பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 l () கம்பன் கலை நிலை கள்ளத்தை ஒளித்து வைக்க முடியாது. வாலியை வென்று சுக்கிரீவனுக்கு அரசுரிமையைத் தங்து யாண்டும் கருமநீதிகளைப் பேணிவருகின்ற தேவரீரது கரும விரத்தைக் கருதி யுனர்ங்கே ஈண்டு இவன் வந்திருக்கிருன். திய அரக்கரது செயலும் இய அம் அழிவு நிலைக்கே வழி கோலி நிற்றலைத் தெளிவாக அறிந்து வெறுத்து எவ்வழியும் தியவர் உறவு தீயது என இக்துளயவன் தணித்து விலகியுள்ளான். நம்பினவரைப் பாது காத்து யான் டும் கம்பியர்க்குக் கண்ணளி புரிந் தருளுகிற எம்பெருமானு டைய நீர்மை சீர்மைகளைக் கூர்மையாகக் குறித்துணர்ந்து ஒர் மையோடு அடைக்கலம் புக உறுதிபூண்டு வந்திருக்கிருன். திய அரக்காது மரபில் பிறக்கவன் ஆதலால் ஏதேனும் கரவாய்த் தீமைபுரிவானே? என்று இவனே ஐயுறுவது பாவம். கள்ளம் கபடுகள் யாதும் கெரியாதவன்; உள்ளம் தூயவன். நான் இலங் கைக்குத் தாது சென்றிருந்த பொழுது என்னைக் கொன்று தொலைக்கும் படி இராவணன் கொதித்துச் சொன்னன், அப் பொழுது இவன் தடுத்து நிறுத்தினன்; தாகரைக் கொல்லுதல் கொடிய பாவம் என்று நீதிமொழிகள் பல கூறிக் கொலேவா யிலிருந்து என்னே விலக்கி விடுத்தான். தேவியைத் கேடி ஊர் முழுதும் ஆராய்ந்து வரும் பொழுது இரவு கடுயாமத்தில் இவனு டைய அரண்மனேயுள் புகுந்தேன். நல்ல மங்கலக்குறிகள் தோன் றின. மனேயகம் எங்கும் புனிதமாயிருந்தது. புண்ணிய முனிவர் சளுடைய வாசம் போல் கண்ணியுள்ளதைக் கண்ணுேடி நோ க்கி எண்ணி மகிழ்ந்தேன். இவனுடைய அருமைத் திருமகள் திரிசடை என்னும் பேரினள். அசோகவனத்தில் அம்மைக்குக் துணையாய் அமைந்திருக்கிருள். அஞ்சி அலமரும் போதெல்லாம் கெஞ்சம் தேற்றிக் கஞ்சமாயிருந்து காயன்பு செய்து நேயம் பெருகி நெடிது பேணி வருகிருள்.’’ என இங்ங்னம் தகவுடன் கூறி மேலும் மாருதி விரித்துப் பேசினன். தஞ்சம் என்று வந்திருக்கின்றவன வஞ்சன் என்று கருதலாகாது. நெஞ்சம் தாயவன்; செறிமுறையுடையவன்; நல்ல நீதிமான் என்று பலவகை அனுபவங்களையும் நயமாக எடுத்துக் காட்டி அனுமான் இனிது பேசி வருகிருன். உள்ளத்தில் உள்ளதை உரையின் முந்துற மெள்ளத்தம் முகங்களே விளம்பும்,