பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3616 - கம்பன் கலை நிலை -- - - -- - வார்த்தைகளில் வார்த்துக் காட்டியுள்ள எ ண்ணங்கள் விேய ஒவியங்களாய்க் கண் எதிரே தோன்றி மிளிர்கின்றன. அபயம் கருதி வந்துள்ள அரக்கர்கோமகனுக்கு இரக்கம் புரிந்து இக்கவிநாயகன் உ ரையாடி வருவது நீதிமுறைகளின் துறை கோய்ந்து வருகிறது. நியாய வாதங்கள் பெருகியுள்ளன. திே மன்றம் உயர்ந்த நீதிமன்றத்தின் காட்சிகளையும் மாட்சிகளையும் ஆட்சிகளையும் இங்கே நேரே காண்கின்ருேம். அரச நீதிகள் வரிசையோடு விசாரணைகளாய் வளர்ந்து வந்திருக்கின்றன. இராமபிரான் சிறந்த நீதிபதியாய் அமர்ந்திருக்கிருன். - விபீடணன் குற்றவாளி நிலையில் வாதியாய் வந்துகிற்கிருன். சுக்கிரீவன், சாம்பவன், சீலன், குமுகன் முதலாயினேர் வாதியைக் குறித்து வாதித்திருக்கின்றனர். நீதி முறைகளிலும் உலக அனுபவங்களிலும் நன்கு தேறிய நியாய வாதிகளைப்போல் நியாய நிலைகளே நீதிபதிக்கு அவர் சாதுரிய சாகசங்களோடு ఛి டுத்துக் கூறியுள்ளனர். அவருடை ய வாதங்கள் எல்லாம் வாதிக்கு விரோதமாகவே முடிந்திருக்கின்றன. f ஒரே சாதனை யாப் அவரது உரைகள் உறுதி செய்தபின் இறுதியில் அனுமான் பேச எழுந்தான் அரசுக்குத் தனியுரிமையான பெரிய நியாய வாதி நிலையில் நின்று இம்மதிமான் அதிசயசாதுரியமாய்ப் பேசி - யிருக்கிருன். ஒவ்வொரு மொழியும் செவ்விய நீர்மை கோய்ந்து சீர்மையுடன் வெளிவந்துள்ளது. * * o "இலங்காதிபதியான இராவணனுடைய தீமையை வெ.அத் கே வீடணன் இங்கே வந்திருக்கிருன்; இயன்ற வரை யும் போ தித்துப் பார்த்தான்; திருந்தாமல் அவன் செருக்குமீறி நின்றமை யால் இவன் பிரிந்து வந்தான். பாவத் தீமை ஏறியுள்ளமையால் அரக்கர் குலம் பாழாப் அழிந்துபோம் என்று தெளிந்தே வெளி எறியிருக்கலால் இவனது புண்ணிய நீர்மை புலன் தெரிய நின் றது. பிறந்த பிறப்பால் அாக்கனே କ୍ଷjt னினும் சிறந்த அருங் கவர்களும் உயர்ந்த ஞான சீலர்களும் இவனே வியந்து புகழ்ங் அள்ளனர். செயல் இயல்களை யாதும் ஒர்ந்து உணராமல் பகை இனத்தவன் என்ற அந்த ஒன்றையே கினைந்து இகழ்ந்து விடுவது