பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3618 கம்பன் கலை நிலை அல்லல் அடைந்து அஞ்சி அலமந்து வந்துள்ளவனது அச் சக்கை நீக்கி ஆகரித்தருளுவதே மேலோர் கடமையாம். அபயம் என்னும் சொல் உயர் பொருளுடையது. பயந்து வந்தவனது பயத்தை நீக்கி அவனே ஆதரித்து அணைத்தருளுவது அபயம் என வந்தது. அவ்வாறு அபயம் கங்து ஆதரிப்பவன் அபயன் என நின்ருன். எல்லாருக்கும் என்றும் அபயம் அருளி ஆகரிப்பவன் இறைவனே ஆதலால் கடவுளுக்கு அபயன் என்று ஒரு பெயர் அமைந்தது. ஆகவே அபயத்தின் நிலைமையும் அதனைச் செய்பவரது கலைமையும் அறியலாகும். எவரையும் வெல்லவல்லவனப் பாண்டும் பயமின்றி யுள்ள வனே அபயன் என்னும் உயர் கிலையை அடைய நேர்கின்ருன். பயமில்லாத தீரனே பயங்து வந்தவரை ஆதரிக்கவுரிய வீரன் ஆகின்ருன். ஆபத்து சகாயன் என்னும் அரிய பெயரைப் பெற்று யாண்டும் யாரும் நேரில்லா விர மூர்த்தியாய் விளங்கு கின்ற நீ ஆபத்தில் வந்து அபயம் என்ருனை உடனே ஆதரித்தரு ளாமல் இப்படிக் குரங்குகளோடு கூடிஆலோசனைகளைச் செய்து கொண்டிருப்பது தகுதியோ? இதனைமிகுதியும் சிந்திக்க வேண் டுகிறேன் என இராமனது அந்த மந்திரலோசனையை அனுமான் இந்தவாறு தன்னுள்ளேயே கிந்தித்துள்ளான். தான் எண்ணி மறுகி இரங்கியுள்ள உண்மையை இறுதி யடியில் அதிவிநயம்ாய்க் குறித்தருளினன். கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே! அந்த வெற்றிவிரனேநோக்கி இந்தக் கல்வி விரன் இவ்வாறு வினவியிருக்கிருன். ஒர் உவமையை எடுத்துக் காட்டிக் கேட் டிருக்கும் கேள்வியைக் கூர்ந்து சிந்திப்பவர் ஒர்ந்து உணர்த்து உவகை மீதுார்ந்து தகைமையைக் கேர்ந்து கிற்கின்ருர், கூவம்= கிணறு. அயிர்த்தல்= சந்தேகித்தல். ஒரு பாலைவனத்தில் நல்ல நீர் உள்ள சிறு கிணறு ஒன்று அருமையாய் அமைந்திருந்தது. எ ல்லாருக்கும் இனிய நீரை உதவி இதமாய் இருந்துவக்க அந்தக்கூவத்தைக் கொடிய பாலை வனம் நெடியதுயர் செய்து நீ இனிமேல் இங்கே இருக்கலா