பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3620 கம்பன் கலை நிலை கருணைக்கடல், அறிவுக்கடல், தருமக்கடல், நீதிக்கடல், - --- - - விரக்கடல், கல்விக்கடல், குணக்கடல் என அக்கோமகன் குலா வியுள்ளமையைக் கூர்ந்து ஒர்ந்து குது கலித்து நிற்கிருேம். - கன் இனமான சிறுபுனலைப் பெரிய நீர் நிலையமாகிய கடல் உரிமையோடு கழுவியருளுவது போல் உற்றவனே உறவாக மருவியருளுக ፰፻ ፺ உருகியருளினன். . - எவ்வகையிலும் எல்லை காணமுடியாதபடி உயர்ந்துள்ள பெருக்ககையாளனை நீ அபயமாய் அடைந்துள்ளவனல் அபா யம் நேருமோ? எ னது ஆலோசிப்பது அதிசயவினுேதம், எனப் பரிகசித்திருக்கிருன். பரிகாசம் அறிவின் விகாசமாயுள்ளது. அபயம் என்றவனை அயிர்த்து அகல விடுதியாயின் அகலிடம் எங்கனும் சிரிப்பாம் என்பது குறிப்பாய் வந்தது. ஆபத்து சகாயன், அபயதானன், அரனகன், சரணியன், சரணுககாட்சகன் எனப் பேர் பெற்றுள்ள நீ அப்பேர்கள் பேர்ந்து போகாதபடி உடனே ஒர்ந்து உதவிபுரிக என உறுதி புரிந்துள்ளான். நீர்மையை நினைவூட்டி நீதியை நிலை காட்டினன். (விபீடணனக் குறித்து இந்த வழக்கை இவ்வாறு விசாரணை க்கு எடுத்ததே கப்பு என உயர்ந்த நீதிபதிக்குச் சிறந்த நியாய வாதி சட்ட நீதிகளைச் சுட்டிக் காட்டிக் குட்டிக் கூறியது போல் அனுமான் இங்கே தட்டிப் பேசியிருக்கிருன். கொற்ற வேந்தே என்று முடிவில் விளித்தது இராமனது வெற்றி கில்ேகளை வியந்து வந்தது. அபசயம் என்பதை யாதும் அறியாமல் பாண்டும் வெற்றிக் திருவுடையகுப் அவதரித்திருக் கும் வீர்மூர்த்தி என்பதை இப்பேரால் விளக்கி நின்ருன். எவ்வழியும் யாராலும் தோல்விகாணுதவன், எவரையும் எங்கும் வெல்ல வல்லவன் என அவ்வில் விர்னே இச் சொல் வீரன் இங்கே துதித்திருக்கிருன். ஜெயராமன் என அன்று அவன் உயர்வாகி நின்றமையால் இன்றும் .ராமஜெயம் என உலகம் மங்கல வழக்காக அவனது நாமத்தைச் சேமம் செய்து யாண்டும் ஆவலோடு கொண்டாடி வருகிறது. -- * பிறவியிலேயே வெற்றித் திருவோடு பிறந்துள்ள கொற்றக் குரிசிலான உனக்கு யாராலும் யாதொரு குறையும் சேராது;