பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் - 36.29 வினைய வார்த்தை என்றது கருமச் சூழ்ச்சிகள் யாவும் மருமங்களாய் மருவியுள்ளவை என அம்மொழிகளின் விழுமியர் நிலைகளை விளக்கி கின்றது. அரிய பெரிய அறிவு நலங்களை அதி விநயமாப் இனிது பேசிய மதிமான் ஆதலால் அவனுடைய வாசகங்கள் ஆசையோடு காண வந்தன." செவி மடுத்து அமிழ்தின் மாந்தி அனுமான் பேசிய வினைய வார்க்கைகளை இராமன் செவி, சாய்த்துக் கேட்டு மகிழ்ந்திருக்கும் மகிழ்ச்சி நிலையை இது விளக்கியுள்ளது. அரிய கலை ஞானங்களை யெல்லாம் பெரிய மாதவர்களிடமிருந்து கேட்டுச் சுவைத்துக் கேள்வி யின் பங்கள் துய்த்து வந்த அழகிய செவிகள் அனுமானுடைய மொழிகள்ை அமிழ்தின் மாந்தியுள்ளமையால் அவற்றின் சுவை நீர்மைகளை ஒரளவு யூகித்துனர்ந்து பேராவலோடு நாம் உவகை மீதார்க் து நிற்கிருேம். அறிவின் சுவைகள் அதிசய போகங்களாயுள்ளன. மாந்துதல்= வாரிக் குடித்தல். சொல்லின் சுவைகளில் ஈடு பட்டு அள்ளிப் பருகி யிருக்கிருன். அமுதம் உண்டவர் ஆற்ற லும் இன்பமும் பெறுகல் போல் அம். மாற்றங்களால் உறுதி நலங்கள் பல பெற்று ஏற்றம் எ ப்தியுள்ளமை எதிர் தெரிய வங். தது. அரியமேதையை வியந்து பெரியமேதை பெருமை செய்தது. பேரறிவாள! நன்று நன்று என்று அனுமான இப் பெரு மான் இவ்வாறு ஆர்வம் மீதார்த்து கொண்டாடி யிருக்கிருன். சொல்லின் செல்வன் என்று முன்னம் சொல்லி மகிழ்ந்தான்; இங்கே பேரறிவாள! என்று நேரே பேரிட்டு அழைத்தான். பகை உறவு என்று பாராமல் யார்மாட்டும் நடுவு கிலைமையாய் கின்று குண நீர்மைகளைக் கூர்ந்து நோக்கித் தரும நீதிகளின், சீர்மைகளை நேர்மையாகக் கூறுகின்ருன் ஆகலால் அனுமானு டைய அறிவும் பண்பும் அதிசய முடையனவாய்த் துதி செய்ய வசதன. - மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி. விடனனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனு மான் கூறிய உறுதி மொழிகளே இராமன் இவ்வாறு உவந்து கொண்டாடியுள்ளாள். வடித்து என்ற தல்ை அக்க உரைக

  • .