பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$580 கம்பன் கலை நிலை வெளியேறத் துணிந்தான். துணிக்கவன் பின்னும் மறுகி மயங்கி ஞன். தமையனை விழைந்து பரிவோடு நோக்கினன். 'அரசர் பெரும! நேர்ந்துள்ள அழிவுநிலைகளைகினந்து என்நெஞ்சம் கெடிது கவலுகின்றது; மக்களும் ஒக்கலும் உறவினங்களும் குல முழு வதும் அடியோடு நாசமடைய மூண்டுள்ளன; பிறப்பின் பாசத் தால் பலவும் பேசினேன்; யாதும் பயன் இல்லை; இனி ஈசன் தான் காக்கவேண்டும்; அடியேன் இதுவரையும் செய்த பிழை களைப் பொறுக்கருளுங்கள், கட்டளை யிட்டபடி விரைந்து போ கின்றேன்; விடைபெற்றுக் கொள்ளுகின்றேன்; வணக்கம்” என இங்கனம் கூறி இரு கைகளையும் கூப்பிக் தொழுது வெளி யே வந்தான். விழி நீர் க.தும்பியது; கண்ணிரைக் துடைத்துக் கொண்டு தன் அரண்மனைக்கு வந்தான். மனேவி மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுக் கணநேரமும் தங்காமல் வெளியே புறப் பட்டு ஊரயல் இருந்த குளிர்க்க மலைச்சாரலில் வந்து கின்ருன். கடல் கடந்து வந்தது அனலன், அனிலன், அரன், சம்பாதி என்னும் இந் நால்வ ரும் விடனனுடைய நண்பர்கள். சல்ல அறிவாளிகள். மதி மந்திரிகளாய் உரிமை பூண்டிருந்தவர்; இக் நீதிமான் வெளியே றியவுடனே கூடவே சேர்ந்து வந்தனர். அந்தத் துணைவர்க ளோடு கிலேமைகளைக் குறித்து ஆலோசித்தான்: இராமன் வா னர சேனைகளோடு வந்து கடலின் வட கரையில் தங்கி யிருத்த லால் அங்கே சென்று அந்த மூர்த்தியைக் கான வேண்டும் என்று வேனவாவுடன் வீடணன் விரைந்து எழுத்தான். ஐந்து பேரும் விமானம் ஊர்ந்து ஆகாயமார்க்கமாய் வந்து சேர்ந்தார். வான ர சேனையைக் கண்டார். வியந்து நின்ருர். அப்பொழுது மாலைநேரம் ஆதலால் அங்கு ஒர் சோலேயில் கங்கினர். அந்த இரவில் சேனைகளிடையே எங்கும் விளக்குகள் எரிந்தன. பரந்து விரிந்த பாற்கடலில் செந்தாமரை மலர்கள் மலர்க்து நின்றன போல் தீபங்கள் பாண்டும் ஒளிகளை விசி அலர்ந்து விளங்கின. படைகள் அடைந்துள்ள அந்தக் காட்சியைக் கண்டு அதிசயம் மீதுார்ந்து கின்றனர். அல்லிடை அருகே நெருங்கலாகாது; விடிந்த பின்புதான் காண வேண்டும் என்று கருதி அயலே இனிய பொழிலில் அமர்ந்து உறுதிகளை காடி உளைந்திருந்தனர்.