பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3659 'கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்.” . (தொல் காப்பியம்) என ஆசிரியர் கொல்காப்பியனர் கொற்றச் சிறப்பிற்குக் குறித்துள்ள இலக்கணத்திற்கு இவ் வெற்றிக் குரிசில் ஒர் விர இலக்கியமாய் ஈண்டு விளங்கி நிற்கின்ருன். : கொள்ளார் = பகைவர். தேம்= இடம். பகைவர் நாட்டினைத் தான் வென்றுகொள்ளுவதற்கு முன் னகாகவே கனக்கு வேண்டியவர்க்கு அதனைக் கொடுத்தருளும் ஆண்டகைமை எனப் பண்டு ஆாலில் விதித்த விரத் திறலுக்குச் சாலும் கரியாய் நின்று ஞாலம் அறிய இக் கோமகன் இங்கே சேமம் செய்துள்ளமை சிந்தனை செய்ய வுரியது. “ஒன்னர் ஆர்எயில் அவர்கட் டாகவும் நூமதெனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!” (புறம்) ஒரு சோழ மன்னனைக் குறித்து ஊன்பொதி பசுங்கொடை யார் என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் பாடியிருக்கிரு.ர். பகை வரது அரண் அவரிடத்திருக்கவும் உம்முடையது எனப் பாவ லர்க்குக் கொடுக்கும் வண்மையோய்! என்னும் அத்தன்மை இவண் செம்மையாகத் தெரிய வங்தது. "மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி கில வரை இழிதரும் பல்யாறு போலப் புலவர் எல்லாம் கின்னேக் கினரே நீயே மருந்தில் கணிச்சி வருங்த வட்டித்துக் கூற்று வெகுண்டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்நோக் கினேயே.' (புறம்) 'கடலை நோக்கி வரும் நதிகள் போலப் புலவர்கள் உன்னை நோக்கி வருகின்றனர். அவர்க்குக் கொடுத்தற்கு மாற்ருர் நாடுகளை நீ நோக்குகின்ருப்!” என ஒரு பாண்டிய மன்னனை தன்னை நோக்கி வந்த விபீடணனுக்கு எதிரியினுடைய இலங்கையை நோக்கி இராமன் வாக்களித்திருப்பதை இது நோக்கி வந்துள்ளது. உண்மை நோக்குகள் உலகறிய நின்றன.