பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3662 கம்பன் கலை நிலை களவியல் அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர இளையவற் கவித்த மோலி என்னேயும் கவித்தி என்ருன். விடனன் இவ்வாறு வேண்டி நின்ருன். கொடிய இரா வனளுேடு உடன் பிறந்தான் என்ற அந்தப் பழியும் இழிவும் நீங்கி விழுமியனுக முதலில் வழிகோலியருளும் படி விழிநீர் சிந்தி இங்ங்னம் மொழியாடியுள்ளான். தீய தொடர்பை நினைக்து உள்ளம் துடித்திருக்கிருன். தாயவனைச் சேர்க்கமையால் தனது தீமை நீங்கியது என உவகை ஓங்கியுள்ளது. அவ்வுண்மையை நுண்மையாக உரைகள் கோலும் உணர்த்து வருகிருேம்.

  • *

பாகனுக்குச் சூட்டியபடி கனக்கும் இராமனது பாதுகை யைச் குட்டி யருளுக என்பான் இளையவற் ■ கவித்த மோலி என்னையும் கவித்தி என்ருன். தன்னை ஆட்கொண்டு அருளும் வகையை இவ்வண்ணம் தொகையாகச் சுட்டி உரைத்தான். மோலி = கிரீடம். கவித்தல் = சூட்டுதல். இளையவன் என உரிமையோடு பரதனைக் குறித்தது பரிவுகோய்ந்து வந்துள்ளது. இராமனுடைய அடிகள் தோய்ந்துள்ள அந்தச் செருப்பே தன்தலைக்கு மணிமுடி என்று மனம் உருகி வேண்டியிருத்தலால் விடனனுடைய பத்தி நிலையும் தத்துவத் தலைமையும் உய்த்துணர வந்தன. பேரன்போடு கண்ணிர் சோரக் கை குவித்து நின்ற அவனது உண்மை நிலையை உணர்ந்து இராமன் உள்ளம் உருகி ஞன். உடனே உரைத்த மொழிகள் உவகை ஒளிகளாய் ஒலித்து எழுந்தன. குகனெடும் ஐவர் ஆனேம் முன்பு: பின் குன்று சூழ்வான் மகனெடும் அஆறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த (அகனமர் காதல் ஐய! நின்னெடும் எழுவர் ஆனேம்; புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிங்தான் உங்தை. இராம வாசகமாய் வந்துள்ள இந்தப் பாசுரம் உலக மக்களுடைய உள்ளங்களை என்றும் உருக்கி வருகிறது. ஒதி யுனருந்தோறும் யாவரும் பேரன்புடையராப்ப் பேரின்பம் அடைகின்றனர். அன்பு:கலம் கனிந்து பண்புபல படிந்து இன்ப நிலையமாப் இனிது விளைந்துள்ளமையால் இராமனுடைய குண ர்ேமைகள் மனிதவுலகத்தைப் புனிதமாக்கி வருகின்றன. வந்த |