பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3667 தன் வழிமுறையில் வந்த இராவணன் செல்வச் செருக் கால் உலகில் பல அழிதுயர்களைச் செய்தான். முடிவில் மகா பதிவிரதையான சீதையைக் கவர்ந்து வந்து கொடிய தீவினையா ளஞயினன். அதனல் இழிவுகள் நேர்ந்தன; அந்த ஈன இழிவு களே எண்ணி மானமோடு மறுகியிருந்த பிரமன் இன்று விபீடண லுடைய நிலைமையைக் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்தான்; தன் மரபுக்கு நேர்க்க இழிவை நீக்கிய விழுமிய குலமகன் என அவனே விழிகளித்து நோக்கி உளம்மிக உவந்தான். இழிந்த என்மரபும் இன்றே உயர்ந்தது என்று செழுந்தனி மலரோன் இடரில் தீர்ந்தான். இங்ங்னம் பிரமன் சிங்கை மகிழ்ந்துள்ளான். ஒரு குலத் தில் இழிவு நேர்ந்தால் அந்தக் குலத்தலைவனுக்குப் பெரிதும் வருக்கமாம். தீயகுலம்; கொடியகுலம்; இரக்கம் அற்றகுலம் என இன்னவாறு அரக்கர் குலம் இராவணனல் பழிக்கப்பட்டு வந்தது; இதுவரை அவ்வாறு பழிபடிந்து வந்த அம்மரபு இன்று அதிசய மாறுகலடைக்க விபீடணனல் இனிமேல் புதிய புகழ் மிகுந்து யாண்டும் துதிசெய்யப்படும் என்று விதி மதி மகிழ்க் திருக்கலைக் கவி இங்கே நமக்குக் காட்டி யிருக்கிரு.ர். வையம் தந்த நான்முகன் மைகதன மகன மைகதன. என்று இர ாவணன் யாண்டும் குலப் பெருமை பாராட்டி வந்தான்; அவனது கொடுமையால் நாளடைவில் அம் տաւ கொடியதாய்ப் பழியடைந்து வந்தது; இறுதியில் சீதைக்கு இழைத்த துயரால் பெரும் பழி மிகுந்து அது பெரிதும் இழிந்தது ஆதலால் அமிழ்தம் அன்ள்ை திறத்தினின் முறைமை நீங்கி இழிந்த என் மரபு என்று இழிவின் மூலத்தை இங்ங்னம் கழிவி ரக்கத்தோடு கருதி மொழிந்தான். இவ்வாறு பழியோடு இழிவடைந்த அந்த மரபு விபீடண ல்ை ஒளி மிகுந்து உயர்வடைந்தது என்பான் இன்றே உயர்ந்தது என்று உவகை கூர்ந்தான். கரும மூர்த்தியான இர ாமனேச் சேர்ந்தமையால் வீடணன் கருமவான் ஆயினன்; ஆகவே அவன் பிறந்த மரபும் மகிமையாய் உயர்க்கது என உவந்து நின்ருன்.