பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4066 கம்பன் கலை நிலை செஞ்சோற்றுக் கடனின்றே கழியேன் ஆகில் திண்டோள்கள் வளர்த்ததல்ை செயல் வேறுண்டோ? ஒர் ஊரும் ஒருகுலமும் இல்லா என்னே உங்கள் குலத் துள்ளோரில் ஒருவன் ஆக்கித் தேரூரும் அவர்மனேக்கே வளர்ந்த என்னேச் செம்பொன்மணி முடிசூட்டி அம்புராசி நீரூரும் புவிபாலர் பலரும் போற்ற கின்னினும் சீர் பெறவைத்தாய் நினக்கே அன்றி எரூரும் கதிர்முடியாய் உற்ற போரில் யார்க்கினி என் உயிர் அளிப்பது? இயம்புவாயே! (பாரதம்) மன்னன் முகம் நோக்கிக் கன்னன் இன்னவாறு பேசியுள் ளான். உரைகளில் மருவியுள்ள உணர்ச்சி நிலைகள் ஊன்றி உணரவுரியன. நன்றி யறிவு முதலிய மேன்மையான நீர்மைகள் சிறந்த ஆண்மையாளரிடமே பாண்டும் கிறைந்திருக்கின்றன. நெடிதுநாள் வளர்த்த அவனுக்கு உயிரைக் கொடுப்பேன் என்று கும்பகன்னன் ஊக்கிகின்றது போல் கன்னனும் போரில் மூண்டு நின்றுள்ளான். செஞ்சோற்றுக் கடன் கழிப்பேன் என்று அவன் நெஞ்சம் துணிந்து பேசியிருப்பதில் நிலைமைகள் தெரிய வந்தன. எதிரிகள் பெருவலியுடையவர்; வெல்லுதலரிது; ஆயி லும் ஆனவரையும் அமர்புரிந்து அருங்கடன் கீர்ப்பேன் என்று தீர்மானித்துள்ளான். ..میر ” உற்றபோரில் நினக்கு அன்றி என்உயிர் யாருக்கு அளிப்பது? என நண்பனிடம் வினவியுள்ள இதில் பரிவும் பண்பும்பெருகி யுள்ளன. அரிய வீரத்தின் பெரிய நீர்மை கெரிய வந்தது. போரில் இறப்பதைப் பெருஞ்சிறப்பாக வீரர் கருதியிருத் தலால் உலகவாழ்வை அவர் வெறுத்து விடுகின்றனர். “Heroism is almost ashamed of its body.” (Ermerson) 'தனது உடல் வாழ்வைப் பெரும்பாலும் விர ம் நானுகின் றது” என்னும் இது ஈண்டுக் காணவுரியது. மரணம் எய்தல் எனக்குப் புகழ். சிறந்த அரச திருவை அடைந்து உவந்து வாழலாம் என்று