பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,094 கம்பன் கலை நிலை ■ முத்துகும்பகருணன் சீறி எழுந்தான்; எழும்போதே அவன் கையில் பிடித்திருக்க வில் ஒடிந்து வீழ்ந்தது; கணைகள் வந்து பாய்வதை யாரும் காணவில்லை; தேர் பரி சாரதி வில் முதலியன நாசமானதையே யாவரும் காண நேர்ந்தனர். இலக்குவனு டைய பாணப் பிரயோகங்களின் விசித்திர வேகங்கள் யாண்டும் வியப்புகளை விளைத்தன. எ திரியும் திகைத்து எதிரே குதித்தான். எறி வந்த வாகனம் இழந்து போனமையால் கும் பகரு ணன் தரையில் பாய்ந்து வறியனுப் நின்ருன்; நிற்கவே அனுமா னது தோளிலிருந்து கீழே காவி இலக்குவன் நேரே எதிர்ந்தான். எதிரவே தன் கையில் பிடித்திருந்த சூலாயுதத்தை இவன் மேல் அவன் கொதித்து எறிந்தான். ஊழித்தீ போல் உருத்து வந்த அது இவன் அம்பால் பாழாய் உதிர்ந்தது. அந்த அதிசய வெற் றியை நோக்கி உம்பரும் இம்பரும் உவகை மீக்கூர்ந்தனர். கன் லுடைய தோல்வியையும்மறந்துகும்ப கருணன் வியந்து கின்ருன். எவ்வழியும் அழியாக திவ்விய சூலம் இவ்வழி இவல்ை இவ் வா. அழிந்ததே! என்று அவன் அயர்ந்து அலமந்தான். அவ் வமையம்அங்கே புதிய சேனைகள் அதிசயமாய் வந்து சேர்ந்தன. புதிய படைகள் புகுந்தன. இராமன் கம்பியும் இராவணன் தம்பியும் இவ்வாறு போ ராடல்கள் புரிந்து கொண்டிருக்கும் பொழுது இலங்கையி லிருந்து மேலும் பல சேனைகள் ஆரவாரமாய்ப் பொங்கி வந்து எங்கும் வளைந்தன. வெள்ளம் போல் புதிதாய் வந்த படைகளை நோக்கி இளையவன் உள்ளம் உளைந்தான் ஆயினும் சினந்து தொலைக்கவே செரு முகத்தில் ஒரு முகமாய் ஊக்கி நின்ருன். தனக்கு உதவியாய் வந்த அந்தப் படைகளைக் கண்டதும் கும்பகருணன் உவந்து கொள்ளாமல் இகழ்ந்து நாணி அரக்கர் குலம் அழிந்தது என அயலகன்ருன். நல்ல சுத்தவிரன் ஆதலால் தனக்கு ஆதரவாக இலங்கை வேங்கன் அனுப்பிய சேனை அவ மானமாய் கின்றது. கன்னம்தனியே சென்று தேவர் எவரையும் வென்றவன் சேனைகளோடு வந்து மனிதனேடு போராடியதில் மானக்கேடு நேர்ந்தது என்று மறுகி நொந்தான். கால வேற்று மைகளையும் வினை விளைவுகளையும் கினைந்து வெறுத்து உளைந்தவன்