பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4097 அரியன முடிப்பதற்கு அனேத்து நாட்டினும் ஒரு தனி உளே இதற்கு உவமம் யாது? என்ருன். (4) சுக்கிரிவனைக் கொல்லும் பொருட்டுத் தான் கொதித்து எறிந்த சூலத்தை நடுவே காவிப் பிடித்து ஒடித்து எறிக்க அனு மனைக் கும்பகருணன் இப்படிப் புகழ்ந்திருக்கிருன். (மிதிலையில் அரிய வில்லை ஒடித்து அங்கே இராமன் சீதையைப் பெற்ருன். இங்கே அதிசயமான குலத்தை , ஒடித்து அனுமான் வெற்றித் திருவைப் பெற்றுள்ளான் என்பது உய்த்துணர வந்தது. திரியம் பகம் என்னும் அவ்வில் சிவபெருமான் திருவருளால் அமைங் தது; இந்தத் திரிசூலமும் அவன் அருளால் வங்கது ஆதலால் இவ்வாறு இணைத்து உறவின் செவ்வியை உணரக் கூறினன்.” அறிவு முற்றிய பித்தன். சிவபெருமானச் சுட்டிச் சொல்லியிருக்கும் இந்த வாக்கி யத்தின் சுவை நோக்கி நுகரத் தக்கது. உலகப் பித்தர் அறிவு மயங்கி அவலமாயிருப்பர்; இந்தப் பித்தன் எல்லாம் அறிய வல் லவனுய் என்றும் குன்ருத ஞான சித்தனப் நிலவி நிற்கிருன். அந்த நிலையைக் கலையின் சுவை கனிய இங்கனம் இடையே கவி காட்டியிருக்கிருர், பித்தன் சூலம் இங்கே இற்று ஒழிக்க மையால் அதளுேடு ஒத்திருந்த சிலையையும் உடன் எண்ண நேர்ந்தான். அந்த வில்லை ஒடித்தவனேடு இந்தச் குலத்தை முடித்தவனையும் இணைத்து எண்ணியதால் இருவருடைய அருமை பெருமைகளும் உரிமை நிலைகளும் ஒருமுகமாய் உணர வந்தன. -- அனைத்து காட்டினும் அரியன முடிப்பவன் என அனுமானக் குறித்துக் கும்பகருணன் இப்படி உறுதியாக் கருதியிருக்கிருன். யாரும் செய்ய முடியாத அரிய காரியங்களை எளிதே செய்து முடிக்க வல்லவன் என்று புகழ்ந்து கொண்டாடியது தனது அதிசய குலத்தை ஒடித்து எறிந்த அற்புத ஆண்மையை கோக் கியேயாம். அரிய காரியம் செய்தது பெரிய மகிமை ஆய து. சுக்கிரீவன் மீது எவிய சூலாயுதத்தை இடையே பாய்ந்து பற்றிப் படுநாசம் செய்து வீசி அயலே அனுமான் காவிப் போ ஞன். அவன் போகவே கும்ப கருணன் மீது வேகமாய்ப் பாய்ந்து சுக்கிரீவன் விருேடு குத்தி விராவேசமாய் மல்லாடி ஞன். தன்னை வந்து தாக்கினவனே அவ் வீரன் மாறித் தாக்கி 513