பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7- இ ரா ம ன் 4,107 காந்திகல் அரக்கன்வெங் கரத்துள் நீங்கிய ஏந்தலை அகமகிழ்ந்து எய்த நோக்கிய வேந்தனும் சானகி இலங்கை வெஞ்சிறை போந்தனள் ஆமெனப் பொருமல் நீங்கினன். மாண்டுபட நேர்ந்தவன் மீண்டு வந்தபோது கோதண்ட விரன் உள்ளம் உவந்து நின்ற காட்சியை இது உணர்த்தியுள் ளது.(கும்பகருணனுடைய கையிலிருந்து நழுவிச் சுக்கிரீவன் பிழைத்து வந்தது இராவணன் வைத்த சிறையிலிருந்து சீதை மீண்டு வந்தது போலவே கருதி மகிழ்ந்துள்ளான். அந்த வானர வேங்கன்பால் இந்த மான விரன் கொண்டுள்ள அன்புரிமையும் நண்பு நிலையும் அறியலாகும். இவனே என் கையிலிருந்து மீட்டி விட்டால் சீதையையும் சிறையிலிருந்து மீட்டியபடியாம் எனக் கும்பகருணன் முன்பு சபதம் கூறியதும் அதற்கு இசைய மீட் சியைக் கவி காட்சிப்படுத்தி யிருப்பதும் கருதியுணர வுரியது. சானகி போந்தனள் ஆம் எனப் பொருமல் நீங்கினன் என் றது சுக்கிரீவன இழந்து நின்றபோது இராமன் கவித்துள்ள தவிப்பும், அவன் வந்து சேர்ந்த பொழுது நேர்ந்த மகிழ்ச்சியும் ஒருங்கே தெரியவந்தன.உரியவனிடம்அரியபிரியம்பெருகியுளது. நெற்றியில் அம்புகள் பாய்ந்தகளுல் மயங்கி நின்ற கும்ப கருணன் பின்பு மூக்கும் காதும் பறிபோனதை அறிந்ததும் பெரிதும் வருந்தி வீர வெறி மண்டி ஆரவாரங்கள் செய்து கொடிய வாளும் நெடிய கேடகமும் கையில் கொண்டு வானர சேனைகளை நாசம் செய்தான். படைகள் படியில் சாய்ந்தன. அங்கபங்கமானதால் அவமானமடைந்து ஆங்காரத்தோடு அடலாண்மை செய்கின்ருன் என்று சிறிது பரிவோடு இராமன் பொறுத்து நின்ருன். அந்த நிலையில் குரங்குகள் பாழாயழிந்தன. அவனுடைய வாளாடலால் மாண்டு மடிந்த படைகள் நீண்டு குவிந்தன. சாம்பவன் விரைந்து வந்து இராமனை வணங்கி 'அங் தோ அண்ணலே இவ்வாறு பேசாது நின்ருல் நம் படைகள் யாவும் காசமாய் விடுமே! நீசன் வாளால் நெடுங்கொலைகள் விழுகின்றனவே! விரைந்து தடுத்து அவனே அழித்தருளுங்கள்' என்று தொடுத்து மொழிந்து அடுத்துத் தெளித்து நின்ருன்.