பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் - 3973 அற்புத வேகமும் அளவிடலரியன என உளம் மிகம.றகி உறுதி ஒஜலகளைக் கருதியுணர உரைத்துள்ளான். (த்ாபதன் என இராமனை இங்கே குறித்திருக்கிருன். கபத் தையுடையவன் தாபதன் என வந்தான். வனவாச காலத்துக்கு உரிய தவக்கோலமுடையயிைருக்கமையால் இங்கனம் வரைந்து குறித்தான்.) குறிப்பு கூரிய சீரிய காட்சியாப் வந்தது. ஆடம்பர நிலையில் ஆரவாரமாய் வந்த தேவர் அசுரர் முத விய யாவரையும் வென்றவன் ஆதலால் இந்த எளிய கோலத்தில் வந்தவனிடம் தான் இ ஆழி வு ற நேர்ந்ததை நினைந்து இனைந்து மொழிக்கான். ஒரு பரதேசியிடம் படாத பாடு பட்டேனே! என்று பரிதபித்திருக்கிருன். கோதண்ட வீரனுடைய அமராடலும் பாணப் பிரயோகங் களும் அதிசய நிலையில் நிலவி நின்றமையால் பகைமையையும் மறக்து எதிரி துதிசெய்ய நேர்ந்தான். பல வழிகளிலும் பாய்ங்து தன் படைகளை அழிவு செய்த ப க ழி க ளே அவன் புகழ்ந்து சொல்லியிருப்பது வியக்து சிந்திக்க வுரியது. "கல்லியற் கவிஞர் காவிற் பொருள்குறித்து அமர்ந்த காமச் சொல் எனச்செய்யுட்கொண்டதொடைஎனத்தொடையைநீக்கி எல்லேயில் செல்வம் தீரா இசைஎனப் பழுதி லாத பல்லலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ!" (க்ாகுத்தனுடைய ப க ழி க ள் கவிஞருடைய சொல்லும், பொருளும் தொடையும் இசையும்போல் நல்ல வளங்கள் சுரந்து பல் வகையான அலங்காரங்கள் கிறைந்து எல்லையின்றி எழுந்து பாப்ந்தன என இராவணன் இங்ங்னம் சொல்லியிருக்கிருன். நல்ல கல்விமான் ஆதலால் போரில் நேரில் கண்ட பானங் களுக்கு இவ்வாறு கவிஞர் கவிகளை உவமை கூறினன். எழுத்து அசை சீர் தளை அடி தொடை என்னும் உறுப்புக் களால் அமைந்து அரிய பொருள்கள் கிறைந்து அணிகள் பல பொலிந்து எங்கும் விழுமிய நிலையில் விளங்கி வருவன ஆதலால் கவிஞர் கவிகள் இராமன் அம்புகளுக்கு உவமைகளாய் வந்தன. வில்லில் தொடுத்து விடுத்த பகழிகள் நல்ல வரம்புகள் அமைந்து எல்லை யில்லாதனவாய் எழுந்தன; அவை சொல்லில்