பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4,139 கிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகள் காம தாபத்தின் மையல் மயக் கங்களை நன்கு விளக்கி நிற்கின்றன. கான் மிகவும் உருகிக் காக வித்த மங்கையை ஒருவன் மருவ முடியாக போது அவன் பரி தாபமாய்ப் பதைத்துப் படுதுயரங்களை அடைகின்ருன். இரும்பு போன்ற மன வலிமைகளை யுடையஞயினும் காயச் சுழலில் அகப்படின் குறைக் காற்றில் அகப்பட்ட துரும்புபோல் அவன் சுழன்று சுற்றி உழன்.அறு படுகின்ருன். வி. கதாபம் உள்ளத்தில் ஏறிய போது உலகிலுள்ள நல்ல பொருள்கள் எல்லாம் அவனுக் குப் பொல்லாதனவாய்த் தோன்றி அல்லல்கள் புரிகின்றன.) இனிய நிலவொளியை விசி இன்பம் கருகிற சந்திரன் கொடிய சுடு வெயிலாய்க் கொதிப்பைத் தருவது வியப்பாய்க் தோன்.அறுகிறது. மையல்நோய் வெய்ய துயரங்களாய் விரிகிறது. “பட்டுப்படாத மதலுைம் பக்கத்து மாதர் வசையாலும் சுட்டுச் சுடாத கில வாலும் துக்கத்துள் வாடி உழல்வேனே?” (திருப்புகழ்) விரக வேதனை அடைந்தவர் மன்மதனையும் சந்திரனையும் குறித்து இப்படிப் புலம்புவது இயற்கை வழக்கமாயுள்ளது. காதலரது கூட்டுறவில் காமனும் சோமனும் இன்பம் விளைப்ப வர் ஆகலால் பிரிவு நிலையில் துன்பம் கருபவராயினர். காம இச் சையால் மனம் மலினமடைந்து சலனமுறுகிறது; உறவே யா வும் அவலமாய்த் தோன்றுகின்றன; கவலைகள் சூழ்ந்து கொள் ளுகின்றன. மதன விதனங்கள் மானச வேதனைகளாப் மருவி வருதலால் மதி மருண்டு செயலிழந்து மறுகி யுழலுகின்ருர். == -- (பசி நோய்க்கு உணவை நாடி ஒடுதல் போல் காம நோய்க் குக் கலவியை நாடிச் சிவகோடிகள் ஆவலாய் அலைகின்றன.' அவாவியது அமையாதபோது ஆவி அலமந்து உலகின்றது. 'காமக் கலவி சேமக் கலமாய் உய்தி தந்ததால் உயிர் வந்தது' என ஒரு காதலன் உரையாடியுள்ளது ஈண்டு உணரவுரியது. காம நோய் முற்றிய போது கடுங் துயருழந்து படுகிருன்; மதியும் மானமும் ஒழிக் து போகின்றன. போகவே எவனும் பேயா யிழிந்து காயாயுழந்து பிதற்ற நேர்கின் முன். மத்து எறி