பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮞ18Ꮾ " கம்பன் கலை நிலை சொல்லிக் கொண்டே சானகியின் காலில் விழுந்து கொழுது அழுது மறுகி இழுதையாய் அவன் அயர்ந்து கிடங்தான். - அந்த மாய அரக்கனுடைய மாயச் சூழ்ச்சிகளும் வாய் மொழிகளும் தீய குதுகளாய்த் திரண்டெழுங்கன. இவ்வளவு வார்த்தைகளும் அந்த மிதிலை மன்னனன சனகனுடைய ஒலிக ளாகவே யிருந்தன." போலி வேடம் புனைந்து வந்துள்ள மாயச் சனகன் உண்மைச் சனகன் போலவே உருவிலும் செயலிலும் உரையிலும் ஒலியிலும் குறிப்பிலும் சிறப்பிலும் நிறை ஒத்திருந் தது செடிய அதிசயமாய் கின்றது. மாய விஞ்சைகளில் கெடிது பழகினவன் ஆதலால் அத்தீயவனுடைய க வான செயல் இயல்களை யாதும் தெரிந்து கொள்ள முடியவில்லை. சீதையின் உறுதியான மனநிலைபைக் குலைத்து வினைமுடிவு கான விசயமாக முதலில் ஒர் விசித்திர வாதத்தை விரித்துப் போதித்தான். அவனது போதனை புலேபடிந்து வந்தது. பூவின்மேல் இருந்த தெய்வத்தையலும் பொதுமை யுற்ருள். அதிசாதுரியமாக இதைக் கூறியிருக்கிருன். தாமரை மலர் மேல் வசிப்பவள்.ஆதலால் இலட்சுமியை இங்கனம் குறித்தான். -தெய்வத்தையல் என்றது அவளது திவ்விய நிலைமை தெரிய வந்தது. திருமாலும் பெருமால் கொள்ளும்படி அதிசய சவுந்தர வ தியாய் அமைந்துள்ளமையைக் தையல் என்னும் சொல் விளக்கி நின்றது. உரிய பெயர் அரிய நிலையை உணர்த்தியது.) 'திருமாலின் அருமை மனேவியாய் அமைந்துள்ள அந்தத் தெய்வ சுந்தரியும் செல்வர் பலரிடமும் போய்த்தங்கி அவர்களு க்கு உவகையூட்டி இன்பம் புரிந்து வருகின்ருள் என்பான் ஆ வின் தையலும் பொதுமை யுற்ருள் o ன்ருன். 'கல்விக்குச் - ர அF வதி அதிதேவதையாயிருக்கல் போல் செல்வத்துக்கு இலட்சுமி அதிதேவதையா யிருக்கிருள். செல்வத்தை இலட்சுமி என்று உபசாரமாய்ச் சொல்வது யாண்டும் வழக்கமா யுள்ளது. g" "முயற்சி திருவின ஆக்கும். (குறள்,616) செல்வத்தைத் திரு என்று தேவர் இதில் குறித்திருக்கிரு.ர். திருமகள் அருளால் வருவது ஆதலால் செல்வம் திருவனவந்தது.