பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4, 199 தன் நிறையைக் காத்து இப்பெண்ணரசி நிலைத்து நிற்பதை நோக்கி மண்ணும் விண்ணும் வியந்து வருகின்றன. (இந்தப் பதிவிரதை ஒருத்தியால் பெண்மை உலகம் முழுதி வதும் பெருமகிமை அடைந்துள்ளது. உண்மையான கற்பு நிலைக்கு உலகம் அறிந்த சான்ருய் இக்குலமகள் ஒளி செய்துள் ளாள். அரிய புனிதவதி பெரிய மகிமைகளைப் பெற்ருள். s “She is the very type of the true Indian woman, for all the Indian ideals of a perfected woman have grown out of , that one life of Sita.** (Vivekananda) 'இந்தியாவின் உண்மையான பெண்மைக்குச் சீதையே தலைமையான நிலைமையில் நிலவியுள்ளாள். பரிபூரணமான பதி விரகைகளுடைய நீர்மைகள் யாவும் இக்கற்பர சியின் சீர்மை Д. Т: Г வாழ்விலிருக்கே வளர்ந்திருக்கின்றன.” என்று விவேகா னக்கர் இவ்வாறு வியந்து கூறியிருக்கிரு.ர். புனிதமான பெண்மை நிலைக்கு உலகில் ஒர் முன் மாதிரி எனச் சீதை எண்ணப் பட்டுள்ளமையால் இப்புண்ணியவதியின் கண்ணியமும் மகிமை மாண்புகளும் துணுகி யுனா வந்தன. நிலைகுலையும் படியான கொடிய பல குதுகளை இலங்கை வேங்தன் இடைவிடாமல் இழைத்து வந்துள்ளான்; இவ்வளவு கடுஞ்சோதனைகள் எங்க மங்கைக்கும் ஏற்படவில்லை; கடுமை யான அவ்வளவு அபாயங்களையும் எளிதே தகர்த் தெறிந்து கன் கற்பைக் காத்து இந்தப் புனிதவதி அம்புத நிலையில் அமர்ந்திருக் கிருள். பெண்மையின் உண்மை நீர்மைகள் ஒளி புரிந்துள்ளன. : “காற்குணமும் நாற்படையா ஜம்புலனும் கல்லமைச்சா ஆர்க்கும் சிலம்பே அனிமுரசா--வேற்படையும் விாளுமே கண்ணு வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே பெண்மை அரசு.” என்றபடி உண்மையான பெண்கள் நாயகமாப் ஒளி செய் திருத்தலால் உலகமங்கையர் எவரும் தங்கள் திலகம் என்று உரி மையுடன் இக்குலமகளை உளம் உவந்துதொழுது வருகின்றனர். -...--" \ட்சானகி, சீதை, மைதிலி என இப்பெண்ணரசியின் நாமங்க ளேப் பெண்மை உலகம் இன்றும் பேராவலோடு பேணி வருகின் ம.த. உரிய துணை பாதும் இல்லாமல் கொடிய சிறையில் இருக் து