பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4206 கம்பன் கலை நிலை புரிய நேர்வனே; அரிய உறுதித் துணையை இழந்தான் என்று என்னை எவரும் எளிதே எள்ளி இகழ்ந்து பேசத் தனியே கள்ளி விட்டு நீ மறைந்து போயிருப்பதை நினைந்து கினைந்து என் நெஞ் சம் கவிக்கின்றது. உன்னுடைய அருத்திறலாண்மையும் பெருங் தகைமையும் அற்புதவிரமும் அற்பனை என்னுல் அநியாயமாப் அழிந்து போயினவே, மேரு மலையே கால் கழுவும் கல்லாப் உனக்கு மேவியிருந்ததே! அத்தகைய நீ ஒரு மனிதன் வில்லால் இறந்தாயே! அந்தச் சொல்லேக் கேட்டு நானும் உயிர் சுமந்து நிற்கின்றேனே! மூண்ட துயரங்கள் என் உள்ளத்தைச் சுட்டு எரிக்கின்றனவே! உடனே மாண்டு படாமல் நான் நீண்டு கிற் பது கெடும்பழி, ஆ எனக்கு நேர்ந்துள்ள இழிவுகள் எவ்வளவு! இராமனையும் இலக்குவனையும் கொன்று தொலைத்துச் சேனைக் கடலைக் கலக்கி வானரங்களை அடியோடு ஒழித்து வெற்றி விருேடு நீ மீண்டு வருவாய்! என்றே நீண்ட ஆவலோடு நான் நேர் நோக்கி நின்றேன். மாருன வேறு அவச்சொல்லைக் கேட் டேன்; எல்லா இழவுகளுக்கும் நானே மூல காரணம்; ஐயோ! இனி நான் உயிர் வாழ்ந்திருக்கலாமா? கம்பி கும்ப கருளு! பிறந்த பிறப்பின் பயனை இழந்து நிற்கின்றேன்; விரைந்து இறந்து உன்னே வந்து அடைந்து கொள்வேன்' என இன்ன வாஅ இன்னல் மீதுார்ந்து பன்னிப் புலம்பிப் பகைத்துத் துடிக்க இலங்கை வேந்தன் முடிவில் கடுத்துக் கொதித்தான். சோகத்தில் ஆழ்ந்து புலம்பிய அவன் அதி வேகமாய் மாறிச் சீறி விர வாகம் கூறியது அதிசய ஆற்றலை விளக்கி நின் றது. மானக் கொதிப்பும் விரத் துடிப்பும் மானச வேகமும் யாவரும் வியங் து நோக்கத் தேவரும் அஞ்சி அலமர மிஞ்சி எழுகதன. தாவரிய பேருலகத்து எம்பி சவத்தோடும் யாவரையும் கொன்றடுக்கி என்றும் இறவாத மூவரையும் மேலேநாள் மூவா மருந்துண்ட தேவரையும் வைப்பேன் சிறை என்ன ச் சிறிஞன். (1) அக்கணத்து மந்திரியர் ஆற்றச் சிறிது ஆறி இக்கணத்து மானுடவர் ஈரக் குருதியால் முக்கைப் புனலுகுப்பேன் எம்பிக்கு என முனியாத் இக்கனேத்தும் போர்கடந்தான் போயினுன் திவிழியான். (2