பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4208 கம்பன் கலை நில் இலங்கை வேக்கன.து.அழுகையையும், மிதிலைச் செல்வியின் உவகையையும் இவை சுவையாக உணர்த்தியுள்ளன. முன்பு தன்னை அழ வைத்தவன் பின்பு தானே அழ நேர்ந்தான்; அந்த அழுகை இந்தக் குலமகளுக்கு விழுமிய உவகையை விளைத்தது. அழுகையும் சிரிப்பும். பிறர் துயருறுவதைக் கண்டால் உள்ளம் இரங்கி அனுதா பங் கொள்வது பெரியோர் இயல்பு; அதற்கு மாருகச் சீதை இங்கே உவந்தாள் என்றது சிறுமை அன்ருே? எனின், ஆகாது; கொடிய பகைமை மூண்டு நெடிய தீமைகளைச் செய்து வருகி ருன் ஆதலால் அத் தீயவன் துயரில் இத் தாயவள் உவகையுற நேர்ந்தாள். மூண்டு எதிர்ந்த பகைவன் அழிந்துபடின் நீண்டு வென்ற விரன் நெஞ்சம் களித்தல் போல் ஈண்டு வைதேகி உள்ளம் உவகை கூர்ந்துள்ளது. தம்பி இறக்க துக்கத்தால் இராவணன் புலம்பி அழுதான்; அந்த அவல அழுகையை வெளிப்படையாகச் சொல்லாமல் அதிசய விநயமாய்க் கவி இங்கே கூறியிருப்பது கூர்ந்து சிந்திக்க வுரியது. கூரிய குறிப்பு சீரிய நிலையில் சிறந்து வந்துளது. பண்டைத் தன் காமத்தின் காரணத்தைப் பாரித்தான். முன்பு நேர்ந்த தனது பெயரின் காரணத்தை உலகம் அறி யச் செய்தான் என இது உணர்த்தியது. கைலாசமலேயை இலங்கை வேந்தன் எடுத்த பொழுது சிவபெருமான் காலால் மிதிபட்டுக் கீழே அழுந்தினன், அதனல் அலறி அழுதான்; பின்பு பெருமான் அருள்புரிய வரபலங்களோடு வெளியே வந்தான். அன்று அழுதமையால் இராவணன் என்று பெயர் எழுந்தது. ரோதனம் = அழுதல். அதனையுடையவன் இராவணன் என வந்தான். பிறரை அழச் செய்யும் பெற்றியும் தெரிந்தது. தசமுகன் என்பதே. பின்பு ஈசன் கைலையை எடுத்த போது இராவணன் என சேர்த்தான். புலம்பி அழுகமையால் எழுந்த அந்தப் பெயரின் மூலப் பொருளை ஞாலம் அறிய விளக்கினன் என் பார் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான் என்ருர். பாரித்தல்=பலரும் அறிய விரித்து விளக்கிச் சொல்லுதல்.