பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4234 கம்பன் கலை நிலை சேனைகள் எதிர்ந்தன. போர்மேல் போன வானரப் படைகள் பொருகளம் புகுங் தன; புகவே அரக்கர் சேனைகள் ஆர்த்து எழுங்தன. வடகடல் பொங்கித் தென்கடலைச் சென்று மோதியதுபோல் கவியின் தானே கலக்கவே கடும்போர் மூண்டது. இருதிறப் படைகளும் அடுதிறல்களோடுபோராடின; இடங்கள்தோறும்படுகொலைகள் பெருகின. வேல் வாள் சூலம் முதலிய கொடிய ஆயுதங்களால் வான ரங்களை அரக்கர் கொன்று குவித்தனர். நால்வகைச் சேனே கள் மீதும் வானரங்கள் பாய்ந்து கனன்.அறு காசங்கள் செய்தன. இலக்குவன் விரைந்தது. தன்னை அறைகூவி அழைத்த அதிகாயனக் காணவிரைந்து சேனைத்திரளுள் புகுந்த இலக்குவன் எதிர்ந்தவர் எவரையும் கொன்று குவித்து வென்றி விருேடு வில்லாடல் புரிந்தான். பானங்கள் பாய்ந்த இடங்கள் எல்லாம் உயிர் இனங்கள் மாய்க் தன. உடல்கள் உருண்டன; உதிரங்கள் ஓடின. தலைகளும் முண் டங்களும் மலைகள் என மருவின. யாண்டும் அஞ்சாமல் எங் கும் போராடி நீண்ட விருேடு நிலவி வாழ்க் துவக்க அரக்க விரர்கள் யாவரும் யாதொரு செயலும் ஆற்ருமல் ஆண்டு மாண்டுமடிந்தனர். பகழிகள் வருகிற வகைகளை அறியாமலே படுசாவுகள் மேவின. இளையவன் ஏவிய ஒரு பானத்தால் ஒரு குடும்பக் கூட்டம் முழுவதும் ஒருங்கே அழிந்து மருங்கே விழுந்தது. அக்த அழிவு நிலை அதிசய வியப்பாயிருந்தது. தாதையைத் தம்முனேத் தம்பியைத் தனிக் காதலேப் பெயரனே மருகனைக் களத்து ஊதையின் ஒருகனே உருவ மாண்டனர் சிதைஎன்று ஒருகொடும் கூற்றம் தேடினர். போர்க்களத்தில் அன்று அரக்கர் அழிக் துபட்ட கிலேயைக் குறித்துக் கவி இங்கனம் சுவையாகக் காட்டியிருக்கிருர். பாட் டன், பேரன், தங்தை, மைந்தன்,அண்ணன், கம்பி, மருகன், மைத் துனன் முதலிய உறவினர் அனைவரும் ஒரு சாத்தால் இறந்திருப் பது வியப்பாயுள்ளது. அரக்கர் குடியில் உள்ளவர் எல்லாரும் போர்விரர் என்பதும் அவ்வளவுபேரும் அரசுக்கு உரிமையாகப் போர்புரிய வந்துள்ளார் என்பதும் ஈண்டு உய்த்துணர வந்தன.