பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4260 கம்பன் கலை நிலை மணியை எனக்குக் காட்ட மாட்டாயா? இந்திரனேயும் வெல்ல வல்ல நல்ல சுந்தரனைப் பெற்றுள்ள பெரும் பாக்கியவதி என்று அந்தரத்து அமரரும் புகழ்ந்து போம்ம மகிழ்ந்து வந்த என் வாயில் இன்று நீ மண்ணைப் போட்டுவிட்டாயே! கெட்ட வழி யில் தலையிட்டமையால் குடியும் குலமும் அடியோடு அழிய நேர்ந்தனவே. குடித்தலைவனை பாட்டன் சொல்லையும் கட்டி ஞய்; அருமைக் கம்பியின் அறிவுரைகளையும் அவமதித்தாய், கும் பகருணனை அவமே கொன்று தொலைத்தாய்! அக்கன் அழிக் தான்; அதிகாயன் ஒழிந்தான்; மக்களில் இனி மீதமாயிருப்ப வன் இந்திரசித்து ஒருவனே, அவன் கதியும் என்னுமோ? அந்தோ! மடமையாய்க் கொடிய காமத்தில் நீ மூழ்கினமையால் உன் குலம் அழிய நேர்ந்ததே; அழிவுநிலையை விழிதிறந்து பார்க் கவில்லையே! அமரரும் அடிமையாய் ஏவல் செய்ய வாழ்ந்த குடி அவலமாய் இழிந்து அழிகின்றதே! உத்தம பத்தினியான சீதை மேல் ஆசை மூண்டபோதே குலத்துக்கு நாசம் நீண்டதே! அந்தோ! இனி என்ன கேடுகள் எல்லாம் நேருமோ?’ என்று இன்னவாறு பலவும் பன்னி அத்தலைவி புலம்பியிருப்பது பரிதா பமாய் நின்றது. உள்ளத் துயரங்கள் உயிரை வாட்டியுள்ளன. துன்பம் என்பதே இன்னது என்று யாதும் அறியாதவள், என்றும் இன்ப போகங்களிலேயே களித்து வாழ்த்துவந்தவள்; தன் மகன் இறந்துபட்டான் என்று கேட்டதும் உள்ளம் துடித்து உயிர் பதைத்து இப்படி அழுது புலம்பலாள்ை. அழகண்டும் அறிந்திலாதாள். எனத் தானிய மாலையைக் கவி இவ்வாறு வரைந்து காட்டி யிருக்கிருர். வறுமை பிணி மூப்பு மரணம் முதலிய துயரங்களால் நொந்து அழுதவரை இதுவரை யாதும் பாராதவள்; துன்பக் தொடர்பு சிறிதும் தெரியாமல் இன்பக் களிப்பிலேயே இறு மாந்து வாழ்ந்துவந்தவள் என்பதை இங்கே அந்த அரசியை நாம் அறிந்துகொள்ளுகிருேம். பிறர் அழுகதையும் அறியாமல் முழுதும் சுகபோகங்களிலேயே மூழ்கி யிருந்தவள் இன்று சேர்ந்த துக்கத்தால் புதுமையாப் அழத் தெரிந்துகொண்டாள். தனது மகனை இழந்த கொடிய சோகம் கன் உயிரை வகைத்த மையால் தன்னுடைய கணவனே இன்னல்மீஅார்ந்து கடுத்து