பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4261 வைகாள். அவன் கொண்டுள்ள தீமையான காம ஆசையால் தன் குலத்துக்கு கொடிய நாசம் வந்துள்ளது என்று குலை துடித்திருக்கிருள். அங்த உள்ளத்துடிப்புகள் உரைகளில் வெளிப் பட்டுள்ளன. நீதிமுறையை இடித்து நேரே உணர்த்தினுள். பேதையாய்க் காமம் பிடித்தாய்! என்றது அவனது ஈன இச்சையை இகழ்ந்து கூறியபடியாம். மேதையாய்க் காமம் துய்க்கலாம்; அவ்வாறு இனிது நுகராமல் மடமையாய் இழிந்து மறுகி உழலுகின்ருன் என்னும் நிலைமை இங்கே தெரிய வந்தது. தானியமாலை முதலாக அழகிய மனைவியர் எவ்வளவோ பேர்கள் உழுவலன்போடு தழுவ விழைந்து விழுமிய நிலையில் எதிர்பார்த்திருக்கின்ருர்;. அவ்வாறிருந்தும் அந்த உரிமையாளர் எல்லாரையும் இகழ்ந்துவிட்டு வினே சீதையை விழைந்துபோய்க் காலடியில் விழ்த்து மால்கொண்டு மறுகி இலங்கைவேந்தன் இழிந்து உழலுவது கொடிய மடமையாம் என அவள் குறித்து இகழ்ந்துள்ளது கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிந்திக்கவுரியது. பிழைப்பாயோ? என்றது பிழைக்கமாட்டாப், அழிக்தே ஒழிவாய் என்பது தெளிந்துகொள்ள வந்தது. காமவெறியால் ருேமநெறியிழந்து கிலைகுலைந்துள்ளான் என்று நெடுநாளா கெஞ் சம் கனன்றிருந்தாள் ஆதலால் அந்த வஞ்சம் தீர இன்று வைய நேர்ந்தாள். புத்திரனே இழந்த துக்கத்தால் உள்ளங் கொதித்து உயிர் பதைத்து வந்தவள் இப்படித் துயரத் துடிப்போடு கனவ னைக் கடுத்துப் பேசினள். மனக்கடுப்பு உரையில்வெளிப்பட்டது. சிதையால் இன்னும் வருவ சிலவேயோ? நேர்ந்துள்ள இழவுகளுக்கெல்லாம் மூலகாரணத்தை ஒர்க் துனா இங்கனம் உருத்துரைத்தாள். கேடுகளும் துயரங்களும் கிளர்ந்துவந்து பலவகைகளிலும் படுகாசங்களை விளைத்து கிற்கின் றன; அங்கிலைகளை ஒரு சிறிதும் உணராமல் புலைநிலையில் இழிச் திருப்பது கொடிய மடமையாம் எனக் கடுமையாக் கனன் றிருக்கிருள். நிலைமைகளை நன்கு தெரிந்தவள் சொந்து பேசிள்ை. 'பொன்னுலக வாசிகளும் புகழ் து போற்ற அதிசய நிலையில் ஒளி மிகுந்துள்ள இலங்காபுரி தியால் வெந்து நோயுழந்தது; குரங்கு வ்ைத்த தீ இலங்கை சுட்டது என்னும் நீண்ட கொடும்