பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3988 கம்பன் கலை .ീ8ഖ என்ற இந்த உரை அவனுக்கு ஒரு நசை உணர்ச்சியை ஊட்டியது. மறுபடியும் அரிய பல ஆயத்தங்களோடு போய்ப் போர் புரிந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று விழைந்து எண் னவே தளர்ந்திருந்த தளர்ச்சி நீங்கியது; கிளர்ச்சி ஒங்கியது." இன்று வென்ற இராமன் நாளைத் தோல்வி யடைவான்; தோற்ற நீங்கள் கட்டாயம் வெற்றி பெறுவீர்கள் என்று சுட் டிச் சொன்னதுபோல் அவன் கட்டி யுரைத்த உரை அரசனுக் குக் களிப்பை விளைத்து விழிப்புறச் செய்தது. தேவ தேவர்களையும் வென்று யாவரும் அடிபணிய அரசர் எருய்த் தலைமை பெற்றுள்ள தாங்கள் புலையான புல்லிய ஒரு மனிதனை வெல்ல மறுகி யிருப்பது மாய மயக்கமேயாம் என அத் தீயவன் தெளித்திருப்பது விழித்து நோக்க நேர்ந்தது. மானக் கயிலையை வெருவல் கண்டாய் என்றது தனது உக்கிர வீர நிலையை உணர்ந்து மன்னன் உறுதி பெற வங்தது. . ஈசன் மலையும் நிலை குலைந்து வெருவ நிலையான ஆண்மை புரிந்த நீங்கள் ஈசல் போன்ற எளிய மனிதர் இருவர் செய்த போரை கினைந்து உள்ளம் ஊசலாடி உளைவது எசலான இழிவு என்பான் மானுடர் பொருத போர்க்கு வெருவுதி போலும் என் முன். அன்று மூண்ட போரில் இலங்கை வேந்தன் அவலமடை ந்து அஞ்சியுள்ள நிலையை இந்த அமைச்சன் வாய்ச்சொல் நெஞ் சறியச் செய்தது. நிலைமையைத்துலக்கி விளைவினை விளக்கினன். தேவியை விடுவது ஆவியை விடுவதினும் அவலமுடையது; அவ்வாறு விடின் தேவர்கள் சிரிப்பார்; யாவரும் பழிப்பார்; என்றும் குன்ருத பழியை வி ளே த் து இருந்து வாழ்வதினும் யாண்டும் இசை பரவ இறந்து போவது நல்லது என அப் பொல்லாதவன் சாதனையாய்ப் போதனை செய்துள்ளான். படை எடுத்து வந்த பகைவனுக்கு அஞ்சிச் சிறை எடுத்து வந்த சீதையை விட்டான் என்று பேதை உல்கம் பேசிப் பழிக் கும்; அப் பழி படியாமல் எ வ்வழியும் திடமாய் கின்று அட லமரே புரிய வேண்டும் என அந்தக் கெடு மதியாளன் பேசி யிருப்பது நாசகாலத்தின் வாசகமாய் கின்றது.