பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,268 கம்பன் கலை நில்ை வோடு நான் மீண்டுவரேன் ஆயின் இராவணி என்ற அந்த நீண்ட மேன்மைப்பெயர் மாண்டுபோகக் கடவது; இராவணன் மகன் என்ற மதிப்பும் எனக்கு இல்லாமல் போகட்டும்; நானும் இறந்துபட்டவனுகவே யாண்டும் பழிநீண்டு பறந்து படட்டும்' என இன்னவாறு இந்திரசித்து சூள் உரை புகன்று மீளிமை யோடு தங்தையை வணங்கி விடைபெற்று எழுந்தான். அவனுடைய மனக்கொதிப்பும் மானத்துடிப்பும் விரத்திற லும் உரைகள் தோறும் ஒளி வீசி நிற்கின்றன. துக்கத்தொடர் போடு தோய்ந்து உக்கிரவீரங்கள் உருத்து வெளி வந்துள்ளன மருந்தே நிகர் எம்பி. என்று கன் தம்பியை இப்படி விழைந்து பாராட்டியிருக் கிருன். உரிமையும் அன்பும் பெருமை பெற்றுள்ளன. அமிர்தம்போல் இனியனப் அந்த இளையவன் இக்க அண் ண னுக்கு உவகை தந்து வந்துள்ளான் என்று. தெரிகின்றது. உரிய துணைவர்களுடைய பிரிய வாழ்க்கைகள் உரை களில் வெளி வந்துள்ளன. மருந்து அனேய கம்பி இறந்து போனனே! என்று வருங்கி அழுதிருக்கிருன். அத்துயரத் துடிப்பை அடக்கிக் கொண்டு உயர் விர நிலையில் உருத்துச் செயல்புரியும் சபதங்களை அயலவர் அறிய ஆங்காரத்தோடு அவன் நேரே கூறினன். தனக்கு உறுதித் துணையாய் அமைந்துள்ள தெய்வீக ஆயு தங்கள் அவனுக்குப் பெரிய ஊக்கத்தை ஊட்டியுள்ளன. அவ் வுண்மை உரைகளில் பெருகி எழுந்து உலகம் உணர வந்தன. பாம்பில்த்ரு வெம்படை பாசுபதம். என்றது. நாகபாசக்கையும், சிவாத்திரக்கையும் குறித்து கின்றது. சிவபெருமானை அதி தேவதையாக் கொண்டுள்ள அம்பை அவன் மிகவும் துதிசெய்துள்ளான். பசுபதி அருளியது பாசுபதம் என வந்தது. பெயரால் அதன் உயர்வு விளங்கியது. அற்புத நிலையில் அதிசயமான தெய்வப் படைக்கலன்கள் கன்பால் இருந்தும் தனது கம்பியை ஒருமனிதன் கொன்றுவிட் டானே! என்று குமுறியிருக்கிருன். வெம்பி வெதும்பி வெப் அதுயிர்த்த கின்றவன் விறகொண்டு கூறி நேரே சீறி வந்தான்.