பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4274 கம்பன் கலை நிலை 'வன் ஆதலால் நாம் யாண்டும் மிக்க எச்சரிக்கையாய் நிற்க வேண்டும்' என உரைத்த வீடணன் ஆண்டுகின்றபடியே பாவ ரும் விரைந்து வந்து சேரும்படி ஏவலாளே ஏவினன். எல்லாரும் ஒல்லையில் வந்தனர். மேற்குக் கோட்டை வாசலில் வானர சேனை களோடு மூண்டு நின்ற அனுமான் இந்திர சித்து கேர் எறிப் போர்மேல் வருகின்ருன் என்று அறிந்ததும் அதிவேகமாய் இளையவன் அருகே வந்து நின்ருன். அந்த அஞ்சனைச் சிங்கத் தைக்கண்டதும் சுமித்திரைச்சிங்கம் பெருமகிழ்ச்சிகொண்டது. சுக்கிரீவன் அங்கதன் நீலன் குமுதன் முதல் யாவரும் படைக ளோடுவந்து அடலாண்மை பூண்டு யாண்டும் அடர்ந்து கின்ருர். போர்மேல் மூண்டு வருகிறவன் இதுவரையும் யாரிடமும் தோலாத அதிசய விரன்; அவனை வென்ருல் பகை முழுவதை யும் வென்று வெற்றிபெற்றபடியாம் என்று உற்ற நிலைகளை யெல்லாம் உய்த்துணர உணர்த்திய விபீடணன் படைகளே யாண்டும் அடைவுடன் நிறுத்தி இளையவன் அருகே உழுவலன் போடு ஊக்கி எவ்வழியும் வினைவிளைவுகளை நோக்கி நின்ருன். போர்நிலை. இந்திரசித்து போராட வந்துள்ளான் என்று அறிந்ததும் அந்தரவாசிகள் யாவரும் சிங்தை கலங்கிலுைம் அதிசய ஆடல் களைக் காண விழைந்து மேலே ஆவலோடு கூடி கின்றனர். கண்ணினல் மனத்தினல் கருத்தில்ை தெரிந்து எண்ணினல் பெறுபயன் எய்தும் இன்அஎன: நண்ணினர் இமையவர் நங்கை மாரொடும் விண்ணிடுை உறைவிடம் வெறுமை கூரவே. (1) ஒத்திரு தானேயும் உடற்ற உற்அழி அத்தனே வீரரும் ஆர்த்த ஆர்கலி கத்தொலி முரசொலி நடுக்க லால்தலை பொத்தினர் செவிகளேப் புரந்த ராதியர். (2) இலங்கையில் மூண்ட போரைக் காண விழைந்து ஆகாய வாசிகள் நீண்டு நெருங்கி வானம் எங்கனும் நேரே நிறைந்தி ருக்கும் நிலையை இவை குறித்துள்ளன. நாம் கண்பெற்றபயனே இன்று காணலாம் என்று விண்பெற்றிருந்தவர் வேனவாவோடு விரைந்து கூடியிருத்தலால் அன்அறு இந்த மண்பெற்றிருந்த