பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4288 கம்பன் கலை நிலை உலக்குநர் உலக்கின் ருரை எண்ணுவான் உற்ற விண்னேர் கலக்குறு கண்னர் கோக்கிக் கடையுறக்கானல் ஆற்ருர் விலக்கரும் பகழி மாரி விளேக்கின்ற விளேவை உன்னி இலக்குவன் சிலைகொடேகொல் எழுமழை பயின்றது என்ருர். கையற்ருர் கால்கள்அற்ருர் கழுத்தற்ருர் கவசம் அற்ருர் மெய்யற்ருர் குடர்கள் சோர விசையற்ருர் விளிவு மற்ருர் மையற்ருர்க் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்ருர் உய்யச்சாய்ந்து ஒடிச் சென்ருர் உயிருள்ளா ராகியுள்ளார். (5) இடையே மூண்டுவந்து இளையவனே வளைந்து போராடிய சேனைத்திரள்கள் மாண்டுமடிந்துள்ள நிலைகளை இவை காட்டி யுள்ளன. கொடிய போர்களிலேயே நெடிது பழகி நெடுஞ் செருக்கு ஏறிய அரக்கர்கள் இலக்குவன் எதிரே இழிந்து அழிந்து ஒழிந்துபோனதை நோக்கி உம்பரும் வியந்து கம்பமும் அறுகின்ருர். விண்ணுலகவாசிகள் வெருவியது வியப்பால்நேர்ந்தது. விதிர்ந்தன அமரர் கைகள் என்ற கல்ை அமரில் நிகழ்ந்த படுகொலைகளைக் கண்டு அமரர்கள் கைவிதிர்ந்து மெய் நடுங்கிக் கலங்கி கின்ற நிலை துலங்கி கின்றது. விண்ணவரும் இன்னவா ருளுல மனனவா நிலையை எண்ணி யுனர்ந்து கொள்ளலாம். தன்னைக்கொல்ல மூண்டு சூழ்ந்தவர் எல்லாரும் ஒல்லையில் மாண்டு மடிய இலக்குவன் வில் நீண்டு வேலை செய்துள்ளது. கேரில் வந்தவர் பாரில் விழ்ந்து பதைத்தனர்; யானைகளில் ஏறி அடர்ந்து தொடர்ந்தவர் மானம் அழிந்து மடிந்து வீழ்க்சனர்; வாசிகளில் வாவி வந்தவர் நாசமடைந்து போயினர்; சாலாட் படைகள் காலும் கையும் கண்ணும் மூக்கும் தலையும் தோளும் இழந்து பிணக்குவியல்களாய்க் கரையில் நிறைந்தனர். தொடுத் தபகழிகள் அடுத்தவர் அனைவரையும் கடுத்து உயிர் த டைத்துக் கதிவேகங்கள் காட்டி அதிவேகமாப்ப் போயுள்ளன. இலக்குவன் சிலைகொடோ எழுமழை பயின்றது? இளைய பெருமாளையும் அவனது கையிலிருக்க சிலையையும் கருதியுணரும்படி இவ் வுறுதி மொழி மருவி வந்துள்ளது. காலமாரிபோல் அந்தக் கோல வில்லிலிருந்து பானங்கள் சாரி சாரியாய் எழுந்து எங்கும் பொழிந்து அரக்கர்குலத்தை