பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,293 இன்னதிசையில் நின்று இன்னவாறு பொருகின்ருர் କ5Tଶ୪T என்னவகையிலும் அறிந்து கொள்ளாமையால் பேராவலோடு போராட&லப் பார்த்து நின்ற தேவர் பெரிதும் திகைத்துப் பேச நேர்ந்தார். அவருடைய வார்த்தைகள் வியனிலையில் வந்தன. இனைய தன்மை முன் செய்தார் யாவர்? இவ்வாறு அதிசய நிலையில் போராடினவரை இதற்குமுன் நாம் கேட்டதும் இல்லை; கண்டதும் இல்லை என்று இருவரையும் அவர் கொண்டாடி நின்ருர். பேரறிவாளரான அமரரும் இவரது போராடலைப் போதிசயத்தோடு வியந்து போற்றி யிருத்தலால் அப் போரின் சீரும் விரச் சிறப்பும் நேரே தெரியலாகும். ட முன் ஏது? பின் ஏது? இந்த மாதிரியான வீரப்போர் முன் காலத்தில் நடந்ததும் இல்லை; இனி நடக்கப் போவதும் இல்லை என இன்னவாறு உன்னி உரையாடி யுள்ளனர். அவருடைய வார்த்தைகள் இவ ருடைய போரின் கீர்த்திகளை வார்த்துக் காட்டியிருத்தலால் நேர்ந்துள்ள அடலாண்மைகளை யூகமாப்க் கூர்ந்து நாம் ஒர்ந்து கொள்ளுகிருேம். போரின் திறல் பொருவரு நிலையில் நின்றது. வானவர் தானவர் முதலாகத் திரண்டெழுந்த எவ்வளவோ சேனைகளை எளிதில் வென்று வெற்றியே கண்டு விறு கொண்டு வாழ்ந்து வந்த இந்திரசித்து இந்த விர இளவலோடு நெடுநேரம் கடுமையாகப் போராடியும் யாதொரு முடிவும் காணுமையால் உள்ளம் கனன்று உருத்துக் கொதிக்கான். ஏவிய கணைகள் யா வையும் எதிரழித்து முதிர் வேகமாப் அவன் மூண்டு பொருது நீண்டு வருதலால் இளைய பெருமாளும் உளையலாயினன். விரை வில் வெல்ல முடியவில்லையே என்று உள்ளம் உளைந்தாலும் யா தும் தளராமல் உக்கிர வீர மாப் உருத்து மூண்டு இருவரும் கொதித்துப் போராடினர். மானக் கொதிப்பும் வீரத் தடிப்பும் மறுகி ஏறினவேயன்றி சிறிதும் களரவில்லை. உறுதி ஊக்கங்கள் பெருகி ஒருவரை ஒருவர் பருகிவிடலாம்படி கருவி நின்று துருவி மூண்டு பொருது வந்தது அரிய பேராண்மையாய் மருவிகின்றது. கோபம் கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர்.