பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,006 கம்பன் கலை நிலை க்க வேண்டும். மனம் அகத்தும், இனம் புறத்தும் மனிதனே ச் செப்பம் செய்து வருகின்றன. திய இனம் எ வ்வழியும் நோயை விளைத்து வரும் ஆதலால் தீயினும் நஞ்சினும் தீயது என அதனை மேலோர் அஞ்சியுள்ளனர். வேதம் முதலிய கலைகளை எல்லாம் ஒதியுணர்ந்து நீதி நெறி யில் நிலைத்து நில்லாமல் இராவணன் நிலைதிரிந்துள்ளான்; அகற் குக் காரணம் தியவர் தொடர்பேயாம். விபீடணன், மாலிய வான் முதலிய நல்லவர் சிலர் இதனை எடுத்துக் கூறி நல்லபுக்தி களைப் போதித்து வந்தார்; வந்தும் அவரை உரிமையாக உவந்து கொள்ளாமல் கிங்தனை செய்து விலக்கி விட்டான். கெட்டவர் களையே ஒட்டி நின்று கேடுகள் புரிந்து வங்கமையால் கொடிய நீசம் நெடிது ஓங்கி முடிவாய் நாசம் மூண்டு கின்றது. பிறனுடைய மனைவியை இச்சியாதே; அது பெரும்பாவம் எனத் தம்பி கும்ப கருணனும் முன்பு அன்புடன் கூறினன்; அந்த அறிவுரைகளை யெல்லாம் அவமதித்துக் கொடுமையில் நெடி து நீண்டுள்ளமையால் கடுமையான கேடு வந்தது என்று ஈண்டு வாடி வருந்தி இளையவன் மீண்டும் கடுத்து வைது இ டி க் து மொழிந்து அடுத்துள்ளதை எடுத்துக் காட்டினன். கொடுத்தனே இந்திரற்கு உலகும் கொற்றமும்: கெடுத்தனை நின்பெருங்கிளேயும் கின்னேயும் இந்த வாசகங்கள் எவ்வளவு கடுமையாய் வந்துள்ளன! சிங்தை நொந்து பேசுகின்ருன் ஆதலால் முடிவுகளைத் தணிந்து முத்துற உணர்த்தினன். விளைவுகளை விழிதெரிய விளக்கினன். விண்ணுலக ஆட்சியை இழந்து இந்திரன் இலங்கை வேக் தனுக்கு நெடுங்காலமா அடங்கி ஆட்செய்த வருகிருன். இரா வணன் அழிந்து போக நேர்ந்துள்ளமையால் இனி அவன் வானவர்பதியாய் அந்த மேலான பதவியை அடைந்து கொள் வான். அவ்வாறு அவன் மேன்மை அடைய நேர்ந்தது உன்னு டைய மடமையினலேயாம்; தாழ்ந்து பணிந்து கிடந்த பகை வனே வாழ்ந்து உயர்ந்து கொள்ளச் செய்தாய் என்பான் உலக மும் கொற்றமும் இந்திரனுக்குக் கொடுத்தனை என்ருன். புண்ணியலோக வாசியான தேவராசனும் ஏவல் செய்யும்