பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3963 பொருதேன். பண்டாரக் கோலமாய்த் தவ வேடத்தில் வங்த அந்த இராமனேக் கண்டதும் முதலில் இளிவாக எண்ணினேன்; இளையவனேயும் அவ்வாறே எளிதாக நினைந்து உல்லாசமாப் போராட நேர்ந்தேன். போரில் புகுக்க பொழுது அந்த வில்லா ளர் புரிந்த வல்லாண்மைகளைக் கண்டு என் உள்ளம் வியந்தது. யாரிடமும் எ ன்றும் காணுத அதிசய ஆடல்களை நேரே பார்த்த பின் நெஞ்சம் கனன்று விருேடு போராடினேன். நான் ஆம் றிய அமராற்றல் யாவும் அவலமாயின. மாற்ருன் எதிரே மானம் அழிய நேர்ந்தது. மறைத்துச் சொல்லுவதால் யாது பயன்? நம் குலத்துக்குக் கொடிய இழிவும் நெடிய பழியும் நேர்ந்தன.” என்று இங்கனம் உள்ளம் சோர்ந்து இராவணன் உரைத்து கின்ருன். உரைகள் பருவரல் தோய்ந்து வந்தன. கம் குலத்துக்கு ஒவ்வாப் பங்கம் வந்து உற்றது; பழியும் வந்து உற்றது. என அவன் பரிகபித்திருத்தலை விழி தெரிய இது வெளிப்படுத்தி யுள்ளது. எங்கும் பங்கம் இன்றி இன்பக் களிப்புடன் வாழ்ந்து வங் தவன் ஆதலால் இன்று நேர்ந்த அவமானத்தை நினைந்து இங்க னம் கொந்து கூறினன். பங்கம்= கேடு, கோல்வி, இழிவு. (பாண்டும் வெற்றியும் புகழும் உடையதாப் விருேடு விளங்கி வந்த குலம் இன்று தோல்வியும் பழியும் தோய்ந்தது என உள் ளம் கர்ப்ந்து உரையாடுகின்ருன் ஆ த லா ல் ஒவ்வாப் பங்கம் என்ருன்: நேராத பழி நேர்ந்தது என நெஞ்சம் கவன்றுள்ளது. இழிவான தோல்வி முதலில் சேர்ந்தது; அதனல் பழி படிங் தி.து, ஆகவே பங்கமும் பழியும் அம் முறையே பேச வந்தன. மான பங்கம் அடைந்தேன்; ஈனமான பழி என்றும் அழியாத கிலையில் ஊனமாய் ஒங்கி எழுந்தது என உள்ளம் எங்கி யிருக்கி முன். உற்ற இழிவு உயிரைத் துயர் செய்துள்ளது. _குடும்ப பாசம் படிந்து உறவுரிமையுடன் பாட்டனிடம் பரிந்து பேசுகின்ருன் ஆதலால் நம் குலத்துக்கு என்ருன். வான வர் குலமும் வணங்கி வாழ்த்த மான வீரங்களுடன் மகிமை வாய்ந்த குலம் எனத் தன்குலத்தின் பெருமையை அவன் கருதி 'மகிழ்க்க உரிமை கூர்ந்து வந்துள்ளமை உரையில் அறியவந்தது.