பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/1

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

முகவுரை OND இது கம்பன் கலை நிலையுள் பன்னிரண்டாவது தொகுதி. இலக்குவன் நாகபாசத்தால் மயங்கிக் கிடந்ததைக் கண்டதும் இராமன் பரிந்து வருந்தினான். உள்ளம் உருகி மறுகுங்கால் பானுலகத்திலிருந்து கருடதேவன் வந்தான்; அவன் வரவே காகபாசம் நிலைகுலைந்து நீங்கியது; இளையவன் முதலாக யாவ நம் எழுந்தனர்; நிகழ்ந்ததைக் கண்டு நெஞ்சம் உவந்து கருடனை நோக்கி நன்றியறிவுடன இராமன் நின்று புகழ்ந்தான; இந்தச் சேனைகள் எழுந்த நிலையை இராவணன் அறிந்து நொந்தான்; அவனைத் தேற்றி யிருத்திவிட்டு இந்திரசித்து மீண்டும் போ நக்கு வந்து மூண்டு பொருது முடிவில் மறைந்து நின்று பிர மாஸ்திரத்தை ஏவினான்; அதனால் இலக்குவனோடு சேனைகள் மாண்டு மடிந்தன. ஆயுத பூசை செய்யத் தனியே ஒதுங்கி பிருந்த இராமன நிலைமையைத் தெரிந்து நெஞ்சம் துடித்து நெடிது பதைத்துத் தம்பியைத் தழுவித் தரையில் மயங்கினான. அனுமான் எழுந்து விரைந்து சென்று சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து யாவரையும் எழுப்பினான். அந்த உபகாரியை வியந்து மகிழ்ந்து உழுவலன்போடு இராமன் புகழ்ந்து தழுவிப் போற்றியருளினான். போரில் மாண்டுபட்டவர் மீண்டும் எழுந்து போருக்கு மூண்டு நிற்கவே அளவிடலரிய சேனைத்திரள்களோடு வந்து இந்திரசித்து மறுபடியும் முனைந்து பொருதான்; படைகள் யாவும் இழந்து பரிதாபமாய் மறைந்தான்; அவ்வாறு மறைந்து போனவன மாய வஞ்சமாய்ச் சீதையைப் போல் உருவம் எடுத்து நின்ற ஓர் அரக்கியைப் பற்றிக் கொண்டு வந்து அனு மான எதிரே வெட்டி வீழ்த்தினான்; அந்த மாய வேலையைக் கண்டதும் உண்மையாகவே சீதை மாண்டாள் என்று மறுகித் துடித்து உருகி அழுத அனுமான் இராமனிடம் பரிவாய் உரைத்தான். யாவரும் நெடிது கலங்கிக் கடிது தவித்தார்; இது ஏதோ ஒரு சூது என்று யூகித்து உணர்ந்த விபீடணன் வாவரையும் தேற்றி யிருத்திவிட்டு வண்டு வடிவம் கொண்டு அசோக வனம் புகுந்து சீதையைக் கண்டு மீண்டு வந்து உண் மையைச் சொன்னான்; எல்லாரும் உள்ளம் உவந்தார்; இந்திர சித்து கள்ளமாய் நிகும்பலையில் வேள்வி செய்வதையும் அவன் விளக்கவே படைகள் அங்கே போய் அவனை வளைந்து கொண் உன; யாகம் நிலை குலைந்து போகவே இந்திரசித்து, போராட கோக்தான்; தெய்வப் படைகளை ஏவினான்; ஏவிய யாவையும் தொலைத்து இலக்குவன் எதிர் பொருது நின்றான்; இந்த நிகழ்ச்சிகள் இதில் நிரலே வந்துள்ளன. ஜெகவீரபாண்டியன்.