பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4444 கம்பன் கலை நிலை தமையனுக்கு முந்தித் கம்பி சாவான் எனருன அவன. தங்தைக்கு முந்தி மைந்தன் சாவான் என்ருன் இவன். கொல்ல மூண்டிருக்கும் நிலை சொல்லில் நீண்டு வந்தது. இரக்கம் உற்று என்றது புத்திர சோகத்தால் இராவண்ன் அழுது தவித்து உருகி மறுகவுள்ள பரிபவ நிலைகளே. அவை இங்கே மருமமாய்த் தெரிய வந்தன. பின்னே விளையும் விளைவு கள் முன்னதாக மொழிகளில் நன்னயமாய் வெளியாயுள்ளன. இலக்குவனும் இந்திரசித்தும் சிறந்த போர் வீரர்கள்; உயர்ந்த வில்லாளிகள், அந்த இருவரும் போர் தொடங்குமுன் இவ்வாறு விரவாதமாய் உரையர்டியிருக்கின்ருர். இந்த உரை யா டல்கள் இருவருடைய உள்ளத்திறல்களை விளக்கி அரிய பல சுவைகளைத் துலக்கி நிற்கின்றன. வீரப் பேச்சுகளைக் கேட்குக் தோறும் நமக்கு வியப்பும் உவப்பும் விரிந்து வருகின்றன. விளை வின் மூலங்களை மறந்து விரித்தமதியுடன் வியந்து திளைக்கின்ருேம்: போரில் மூண்ட இருவரையும் நேரே நிறுத்தி நமது கவிஞர் பிரான் இந்திரசித்தாகவும் இலக்குவனுகவும் மாறிகின்று முறை யே பேசியிருக்கிருர் அறிவு ஆற்றல் வீரம் மானம் முதலிய மேன்மைகள் யாவும் பேச்சில் மாட்சிமைகளாய் ஒளி வீசி நிற் கின்றன. பரம்பொருள் மறைந்துகின்று சீவகோடிகளை ஆட்டி வருதல்போல் இவர் கரந்து நின்று காவியவுலகை இயக்கி வருகி ருர். கருமவீரங்களும் தரும நீதிகளும் உரைகள்தோறும் பெருகி உவகை புரிந்து வருகின்றன. காவிய பாத்திரங்களை எதிர்நிறுத்தி உரையாடி வருவதில் அரிய பல மதிகலங்கள் மருவி மிளிர்கின் றன. அதிசய சாதுரியங்களோடு நாடகக் காட்சிகளாப் அவை பாடமைந்து பரிவு சுரந்து பண்புகள் நிறைந்து திகழ்கின்றன. இந்திரசித்தின் வீரப்போர். தேரில் கின்று விரவாதமாய்ப் பேசி வந்த இந்திரசித்து பின்பு வெகுண்டு பொருதான். நாகபாசத்தால் இறந்து தொலைக் தவர் மறுபடியும் எழுந்துவந்து இப்படி விருேடு போராட கேர்க் தாரே! என்று பொங்கிச் சீறி எங்கும் கணைகளை வாரி விசினன். இளையவன் எதிர்ந்து தடுத்தும் அவன் கொடுத்த பகழிகள் யாண்டும் கடுத்துப் பாய்ந்து வான சேனைகளை வதைத்து வீழ்த்