பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 4445 நின. அனுமன் அங்கதன் சுக்கிரீவன் முதலிய சிறந்த தலைவர்க ளும் நிலைகுலைந்து கொந்தனர். மேகநாதன் வேகமாய் வென்று விடுவானே? எ ன்று தேவரும் கலங்கினர். யாவரும் அஞ்சி அல மலாடையும்படி அவன் வில்லாடல் புரிந்தான். அவனுடைய கர வேகசரவேகங்களை நோக்கி அனைவரும் திகிலடைந்து நடுங்கி னர். அதிசய நிலையில் அமராடியதால் யாவரும் மதி மயங்கினர். இளைய மைந்தன்மேல் இராமன்மேல் இராவணி இகலில் விளேயும் வன்தொழில் வானர வீரர்மேல் மெய்யுற்று உளேய வெஞ்சரம் சொரிந்தனன் நாழிகை ஒன்று வளைய மண்டிலப் பிறைஎன கின்றது வரிவில். இந்திர சித்து போராடியிருக்கும் அதிசய வேகத்தையும் அற்புக ஆற்றலையும் இது காட்டியுள்ளது. உக்கிரவீர மாய் உருத் துவேலைசெய்திருக்கிருன். அம்புகளைக் கடுத்துக் கொடுத்திருப் பது கதிவேகங்களை எடுத்து விளக்கி அடுத்து விளைந்துள்ள விளை வுகளைத் துலக்கி நின்றது. சிலையின் வேலை நிலையாய் நிகழ்ந்தது. வில் மண்டிலப்பிறை என கின்றது. போரில் மூண்டு பொருதபோது இந்திர சித்தின் கையில் இருந்த வில் வளைந்து நின்ற நிலையை இங்கே விழைந்து காண்கி ருேம்; வியந்துகொள்கிருேம். வளைங்கவில் நிமிர வில்லை; ஒரு நாழிகை நேரம் வரையும் சந்திரப்பிறைபோல் வட்டமாய் அவ் வில் மருவி நின்றது ஆகலால் மண்டிலப்பிறை அகற்கு உவமை யாய் வந்தது. வளைந்த சிலை நிமிராதபடி வாளிகளை வாரி வாரி விரைந்து சொரிந்திருக்கிருன். வில்லின் வளைவைச் சொல்லியத ஞல் எய்துள்ள அம்புகள் எல்லையில்லாதன என்பது தெரிய வங் தது. கடுவேகத்துடன் அடுதிறல் புரிந்து அவன் அமராடினமை யால் வானரங்கள் பல இடங்களிலும் படுதுயரங்களை அடைந்து பரிந்து மடிந்தன. அழிவு நிலைகளை நோக்கி அமரரும் அஞ்சினர். கச்சம் உற்றவன் கைத்துணைக் கடுமையைக் காணு அச்சம் உற்றனர் கண்புதைத்து ஒடுங்கினர் அமார். மேகநாதன் புரிந்த விரப்போரின் வேகத் திறலை நோக்கி இமையவரும் இமை ஒடுங்கி உளம் நடுங்கி உயங்கி நின்ற நிலை யை இகளுல் உணர்ந்துகொள்கிருேம். சிங்க ஏறுகள் பூண்ட தனது செடிய தேரைக் கடிது செலுத்திக் கடுவேகமாப் அவன்